ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகம்: வேட்பாளர்கள் திக்... திக்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
13:24

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமானதால், தங்களுக்கு வெற்றி கிடைக்குமா, தோல்வி அடைவோமா என, பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஓட்டு எண்ணும் நாளை நினைத்து, திக்... திக்... மனப்பான்மையில் உள்ளனர்.


தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளில், மொத்தம், 71 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், பிரதான கட்சிகளான, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே நேரடி போட்டி ஏற்பட்டது. இதில், தங்களது அரசியல் எதிர்காலம் வாழ்வா, சாவா என்பதால், பிரதான கட்சி வேட்பாளர்கள், ஓட்டுக்கு நோட்டு, பரிசு பொருட்களை, வாரி வழங்கினர். குறிப்பாக, அமைச்சர் அன்பழகன், ஐந்தாவது முறையாக போட்டியிடும் பாலக்கோடு தொகுதியில், பண பட்டுவாடா கன ஜோராக நடந்தது. இதனால், தமிழக அளவில், பாலக்கோடு தொகுதியில் அதிகபட்சமாக, 87.33 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. மாவட்டத்தில், பென்னாகரத்தில், 84.26, பாப்பிரெட்டிப்பட்டியில், 82.10, தர்மபுரியில், 79.73, அரூரில், 78.59 சதவீதம் ஓட்டு பதிவானது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், அதிக ஓட்டு சதவீதம் பதிவான தொகுதிகளை சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், ஓட்டுப்பதிவு தங்களுக்கு சாதகமாக அமையுமா அல்லது பாதகமாக அமையுமா என, ஓட்டும் எண்ணும் நாளை, திக்... திக்... என்ற மனநிலையில் எதிர்பார்த்துள்ளனர்.


 

Advertisement
மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X