அதிகாலை வரை ஆசிரியர்களுக்கு பணி; சி.இ.ஓ., உத்தரவால் கடும் அதிருப்தி | ஈரோடு செய்திகள் | Dinamalar
அதிகாலை வரை ஆசிரியர்களுக்கு பணி; சி.இ.ஓ., உத்தரவால் கடும் அதிருப்தி
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
13:25

ஈரோடு: அதிகாலை வரை, ஓட்டுச்சாவடி பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள், பள்ளிக்கு வர வேண்டும் என்று, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டதால், அதிருப்தியடைந்தனர்.


ஈரோடு மாவட்டத்தில், ஓட்டுச்சாவடி அலுவலர்களாக அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்தாண்டு வழக்கத்தை விட, ஈரோட்டில் குடியிருக்கும் ஆசிரியர்கள், 100 கி.மீ. தூரத்தில் உள்ள, பவானிசாகர் தொகுதியில் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், தேர்தல் பணிக்காக கடந்த, 5ல் காலை அந்தந்த தாலூகா அலுவலகங்களுக்கு ஆசிரியர்கள் சென்றனர். அங்கிருந்து, பணி நியமனம் செய்யப்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு மாலையில் சென்றனர். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடைபெற்றதையடுத்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஒப்படைக்க நள்ளிரவையும் தாண்டியது. ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு தான் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு தான், ஆசிரியர்கள் வீடு திரும்பினர். தொடர்ச்சியாக, 48 மணி நேரத்துக்கும் மேலாக, தேர்தல் பணியாற்றிய நிலையில் நேற்று மதியம், 1:00 மணிக்கு அனைத்து ஆசிரியர்களும், பள்ளிக்கு வர வேண்டும் என்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டதால், ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது


இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த, 5ல், தேர்தல் பணிக்கு சென்றோம். பணி முடிந்து, பெரும்பாலான ஆசிரியர்கள் நள்ளிரவுக்கு பிறகு தான் ஓட்டுச்சாவடியை விட்டு வெளியேற முடிந்தது. சில ஆசிரியர்கள் நேற்று அதிகாலை, 5:00 மணி வரையும் பணியில் இருந்தனர். தொலை தூரம் சென்றிருந்த ஆசிரியர்கள், இரவு முழுவதும் ஓட்டுசாவடியிலேயே தங்கி விட்டு, காலையில் தான் வீடுகளுக்கு புறப்பட்டனர். ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டதால், தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, நேற்று விடுமுறை அறிவித்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் அரசு உத்தரவை மீறி, ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்திருப்பது கண்டிக்கதக்கது. இவ்வாறு அவர்கள்கூறினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம் கேட்ட போது, '' இது போன்ற உத்தரவை வெளியிட்டது கலெக்டர் தான். எனவே, நீங்கள் கலெக்டரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்,'' என்று கூறி இணைப்பை துண்டித்தார்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X