அரசு பஸ் - லாரி மோதிய விபத்தில் மூவர் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
22:25

கடலுார்:அரசு விரைவு பஸ் மீது லாரி மோதிய விபத்தில், மூவர் இறந்தனர்; 40 பேர் படுகாயமடைந்தனர்.


நாகப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு விரைவு பஸ் சென்னைக்கு புறப்பட்டது. பஸ்சை சிவகுமார், 48, ஓட்டினார்.நேற்று அதிகாலை, 2:00 மணியளவில் கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம், மேட்டுப்பாளையம் வளைவு அருகே வந்தது. அப்போது கடலுாரில் இருந்து சிதம்பரத்திற்கு மீன் ஏற்றி சென்ற லாரி, பஸ் மீது மோதியது. லாரி மோதிய வேகத்தில் பஸ் கவிழ்ந்தது.



இந்த விபத்தில், பஸ் டிரைவர் சிவகுமார், 48, பஸ் பயணியர் தரங்கம்பாடி அடுத்த நல்லாடையைச் சேர்ந்த அன்பரசன், 37, நாகப்பட்டினத்தை சேர்ந்த வைரவன், 19, ஆகிய மூவரும் இறந்தனர்.லாரி டிரைவர், பஸ் கண்டக்டர் உட்பட, 40 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிதம்பரம், கடலுார் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X