கூடுதலாக 25 சதவீத ரயில்கள்- கைகொடுக்கும் தாம்பரம் - செங்கல்பட்டு 3வது பாதை பயணியர் காத்திருப்பு நேரம், கூட்ட நெரிசல் குறையும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2021
05:48

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள, மூன்றாவது ரயில் வழித்தடப் பாதையில், வரும், ஜூனில் ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன் மூலம், தற்போது இயக்கப்படுவதை விட, 25 சதவீதம் கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதனால், ரயில் பயணியர், நிலையங்களில் காத்திருக்கும் நேரம் குறைவதோடு, ரயில்களில் கூட்ட நெரிசலும் குறையும்.தாம்பரம் -- செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் இடையே, 256 கோடி ரூபாய் செலவில், மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி, 2016ம் ஆண்டு துவங்கியது.இப்பணியை, ஒன்றரை ஆண்டுகளில் முடிக்க, ரயில்வே நிர்வாகம் திட்ட மிட்டது. ஒப்பந்ததாரர் பிரச்னை, தண்டவாள பாதையில் மண் நிரப்புவதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை காரணமாக, பணிகள் இழுத்தடிக்கப்பட்டன. மந்த கதியில் நடந்து வந்த, மூன்றாவது ரயில் வழித்தடப் பாதை பணிகள், கொரோனா ஊரடங்கால், கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், மீண்டும் பணிகள் துவங்கின. முதலில், கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு வரையிலான பாதையை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு, தண்டவாளம் அமைத்தல், சிக்னல் பொருத்துதல், நடைமேம்பாலம் கட்டும் பணிகள் போன்றவை, துரித கதியில் நடந்தன. இந்நிலையில்,- கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே, மூன்றாவது பாதை பணி முடிந்து, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், விரைவு ரயில் இயக்கி சோதனை நடத்தியுள்ளார். தற்போது, கூடுவாஞ்சேரி -- தாம்பரம் இடையே, 12 கி.மீ., பாதை பணி நடந்து வருகிறது. இப்பாதை பணி இம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, மே முதல் வாரத்தில் ரயில் போக்குவரத்து துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி பணிகள் முடிப்பதற்கு காலதாமதம் ஆனதால், இப்பாதையில் ரயில் இயக்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், ஜூன் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, ரயில் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இதன் மூலம், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, தற்போது இயக்கப்படுவதை விட, 25 சதவீத ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



அதே போல், செங்கல்பட்டில் இருந்து, கடற்கரை மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.இதனால், அடுத்தடுத்த ரயில்களுக்கு இடையேயான நேர இடைவெளி குறையும் என்பதால், ரயில் நிலையங்களில் பயணியரின் காத்திருப்பு நேரமும், ரயில்களில் கூட்ட நெரிசலும் குறைய வாய்ப்புள்ளது. ரயிலில் கிண்டி சென்று, அங்கிருந்து பஸ், ஆட்டோவில், கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கு சென்று வருகிறேன். செங்கல்பட்டு - கடற்கரை ரயிலில், தினமும் கூட்ட நெருக்கடியில் தான் பயணம் செய்கிறேன். தாம்பரம் -- செங்கல்பட்டு இடையே எக்ஸ்பிரஸ் பாதையில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால், பயணியர் வருகைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் இயக்க முடியவில்லை என, ரயில்வே தரப்பில் சொல்கிறார்கள். மூன்றாவது பாதை பணி முடிந்தால் தான் கூடுதல் ரயில் இயக்க வாய்ப்பு ஏற்படும்.உமாஸ்ரீ, கூடுவாஞ்சேரி.செங்கல்பட்டில் இருந்து, சென்னைக்கு மாநகர பஸ்கள் போதுமானதாக இல்லாததாலும், 'டிராபிக் ஜாம்' காரணங்களாலும், பொதுமக்கள் ரயில் போக்குவரத்தை நாடி வருகின்றனர். கொரோனா இரண்டாவதுஅலையின் தாக்கம் அதிகரித்து வருவதால், பஸ், ரயில்களில் பொது இடைவெளி அவசியமானதாகிறது. செங்கல்பட்டு -- தாம்பரம் -- கடற்கரை ரயில்களில் பயணியர் நெருக்கடியை தவிர்க்க, கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். இதற்கு மூன்றாவது பாதை விரைவாக திறக்கப்பட வேண்டும்.குமாரதேவி, நங்கைநல்லுார்.செங்கல்பட்டு -- கடற்கரை மின்சார ரயில்கள், மூன்றாவது பாதை பணியால் அவ்வப்போது தாமதமாக இயக்கப்படுகின்றன.



இதனால், பயணியர் அவதிக்குள்ளாவது தொடர்கிறது. இந்நிலை தவிர்க்கப்பட, மூன்றாவது பாதை பயன்பாட்டுக்கு வந்ததும், இப்பாதையில் கூடுதல் ரயில் இயக்குவதற்கு, தற்போதிலிருந்தே நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.ராஜமித்ரன், கூடுவாஞ்சேரி.நெருக்கடிக்கு தீர்வுஇது குறித்து, இப்பாதை திட்டப் பிரிவு உயர் அதிகாரி கூறியதாவது:கூடுவாஞ்சேரி -- வண்டலுார் இடையே, பாதையில் மண் நிரப்புதல், ஜல்லி நிரப்பும் பணிகள் முடிந்து, தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மின்மயமாக்கும் பணி, சிக்னல் பணிகள் முடிந்துவிட்டன. பெருங்களத்துார் -- தாம்பரம் இடையே, இரண்டரை கி.மீ.,பாதைக்கு மண் நிரப்பப்பட்டு தண்டவாளம் அமைக்கும் பணி, சிக்னல் பணியும் நடந்து வருகின்றன. அதே போல், பெருங்களத்துார், வண்டலுார், ஊரப்பாக்கம் ஆகிய நிலையங்களில், நடைமேடை அமைக்கும் பணியும் வேகமாக நடக்கிறது. இப்பாதை பணிகள், வரும் மே மூன்றாவது வாரத்துக்குள் முடிக்கப்பட்டு, மாத இறுதிக்குள் இப்பாதையில், ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விரைவு ரயில் இயக்கி சோதனை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அதன் பின், ரயில் இயக்க, பாதுகாப்பு கமிஷனரின் அனுமதி கிடைத்ததும், ஜூன் 15ம் தேதிக்குள் பயணியர் ரயில் இயக்கப்படும். சென்னை கடற்கரை -- தாம்பரம் இடையே, இரு வழியிலும், தற்போது, 250 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.தாம்பரம் -- செங்கல்பட்டு இடையே, இரு வழியிலும், 70 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மூன்றாவது பாதை பயன்பாட்டுக்கு திறந்த பின், தாம்பரம் -- செங்கல்பட்டு இடையே, முதல் கட்டமாக, கூடுதலாக, 25 சதவீத ரயில்கள் இயக்கப்படும்.இவ்வசதியால், தாம்பரம் -- செங்கல்பட்டு மின்சார ரயில்களில், பயணியர் நெருக்கடி கணிசமாக குறையும். பயணியர் வருகையையொட்டி, தேவைக்கு ஏற்ப, கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அதிகாரி கூறினார்.


- நமது நிருபர் -


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X