கொரோனா விதிமீறலை தடுக்க தினமும் ரூ.10 லட்சம் அபராதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2021
06:21

சென்னை : சென்னையில், கொரோனா விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு, அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிரப்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, மண்டல வாரியாக, தினமும் வசூலிக்க வேண்டிய அபராத தொகையை, மாநகராட்சி பட்டியலிட்டுள்ளது. அதில், தினமும், 10 லட்சம் ரூபாய் வரை வசூலிக்க, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாநகராட்சி பகுதியில், கொரோனா தொற்று பரவல், இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது. எனவே, நோய் தொற்று பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். அனைவரும் முககவசம் அணிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம், 6 அடி இடைவெளிஉடன் கூடிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் கடைகள், வணிக வளாகம், அலுவலகம், பணியிடங்களில், முகப்பு வாயிலில், கிருமிநாசினி வைக்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், 'மல்ட்டி விட்டமின்' மாத்திரை, 'ஜிங்க்' மாத்திரை போன்றவை, நிறுவன உரிமையாளரால் வழங்கப்பட வேண்டும் மேற்கண்ட இடங்களில், கதவு கைப்பிடிகள், 'லிப்ட்' பொத்தான்கள், கைப்பிடி, மேஜை நாற்காலிகள், 'வாஷ்ரூம்' சாதனங்கள் போன்றவற்றையும், அலுவலக வளாகம் மற்றும் பொது இடங்களிலும், கிருமி நாசினி அடிக்கடி தெளிக்க வேண்டும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் ஆகியவற்றின் முகப்பு வாயிலில், 'தெர்மல் ஸ்கேனர்' வாயிலாக, உடல் வெப்ப பரிசோதனை செய்வதற்கான வசதிகள் மேற்கொள்ள வேண்டும்; 'பல்ஸ் ஆக்சிமீட்டர்' கருவி வைத்திருக்க வேண்டும் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களால் பயன்படுத்தப்பட்ட முகக்கவசம், கையுறை போன்றவற்றை, உரிய முறையில் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த விதிமுறைளை மீறும் தனிநபர், நிறுவன உரிமையாளர்களிடம், அபராதம் வசூலிக்க வேண்டும். இரண்டு முறைக்கு மேல் விதிகளை மீறினால், நிறுவனம், கடை, அலுவலகம், 'சீல்' வைக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளதுதெருவில் நடமாட தடை!
சென்னை மாநகராட்சியில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மண்டலம் வாரியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு குழுக்களுடன், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், ரிப்பன் மாளிகையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது, அவர் அளித்த பேட்டி:சென்னையில், கொரோனா பாதிப்பு, 10 மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா சிறப்பு மையத்தில், 5,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக, 10 கல்லுாரிகள் கொரோனா மையங்களாக தயார்ப்படுத்தப்படுகின்றன. தேர்தலினால் மட்டுமே தொற்று பரவியதாக கூற முடியாது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாதவர்களுக்கு, அபராதம் விதிப்பது கட்டாயமாக்கப்பட்டால் பாதிப்பை குறைக்க முடியும். இதுவரை, 3.75 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடைப்பதற்கு பதிலாக, ஸ்டிக்கர் ஒட்டப்படும். சென்னையில், 39 ஆயிரம் தெருக்களில், 600 தெருக்களில் மட்டுமே, மூன்றுக்கு மேற்பட்ட பாதிப்பு உள்ளது.ஒரு தெருவில், மூன்று பேர் பாதிக்கப்பட்டிருந்தால் பேனர் வாயிலாகவும், ஐந்து பேர் பாதிக்கப்பட்டிருந்தால் தடுப்புகள் அமைக்கப்பட்டும், 10 பேருக்கு பாதிக்கப்பட்டிருந்தால், தெருவில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஏப்-202108:39:43 IST Report Abuse
ஆப்பு சென்னையில் மாசம் 3 கோடி வசூல். இதுபோல் 10 நகராட்சிகள். 30 கோடி வசூல். சிறு நகரங்கள் 100 இருக்கும். அங்கேயிருந்து ஒரு 70 கோடி வசூல். இப்பிடியே இந்தியா முழுவதும் உருவினா, விரைவில் பொருளாதாரம் 350 லட்சம் பில்லியன் டிரில்லியன் கோடியைத் தாண்டிரும்.
Rate this:
Cancel
11-ஏப்-202107:22:20 IST Report Abuse
தமிழ் இது பிச்சை எடுக்குறதுல லேட்டஸ்ட் ஐடியா.
Rate this:
Cancel
Pandiaraj - Karur,இந்தியா
10-ஏப்-202123:00:37 IST Report Abuse
Pandiaraj எலெக்ஷன் பிரச்சார சமயத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் எங்க போயிருந்தார்? கொரோன பரவ நீங்கதான் காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X