சிறு வியாபாரிகளுக்கான தடை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2021
06:44

சென்னை : வியாபாரிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, கோயம்பேடில் சிறு கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



கோயம்பேடில், காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகைபொருட்கள் விற்பனைக்கு தனித்தனியாக மார்க்கெட்டுகள் இயங்கி வருகின்றன. இங்கு, மொத்த வியாபாரம் மட்டு மின்றி,5 கிலோ வரை, பொருட்களை சில்லரை விற்பனை செய்யவும், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இதற்கென தனி கடைகளும் உள்ளன. இங்கு, சிறு வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.



இந்நிலையில், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த, இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.இதன் ஒரு பகுதியாக, கோயம்பேடில் சில்லரை விற்பனை கடைகள் இயங்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், பாதிக்கப்படும் வியாபாரிகள், நேற்று கோயம்பேடில் உள்ள அங்காடி நிர்வாக குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சங்க பிரதிநிதிகளை அழைத்து அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.



மற்ற இடங்களில் விலக்கு அளித்தது போல, 50 சதவீத சில்லரை விற்பனை கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர்.இந்த கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று மார்க்கெட் வழக்கம் போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பிரச்னை தொடர்பாக, நாளை மீண்டும் பேச்சு நடக்கவுள்ளது.



தாம்பரம் மார்க்கெட் பகுதி கடைகள் மூடல்




செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதிகளில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் ஜான் லுாயிஸ், நேற்று ஆய்வு செய்தார்.



அப்போது அவர், கூறியதாவது:குரோம்பேட்டை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, போதிய படுக்கை வசதி உள்ளது. தவிர, ஏழு தனியார் மருத்துவமனைகளிலும், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளன.கொரோனா தொற்று பரவலை தடுக்க, தாம்பரம் நகராட்சியில், மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள், சில்லரை விற்பனை கடைகள் மூடப்படும்; அதே நேரம், சந்தைகள் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து செயல்படலாம்.இவ்வாறு அவர் கூறினார்.



மாற்று ஏற்பாடு தேவை!




இது குறித்து, சிறு, மொத்த வியாபாரிகள் கூறியதாவது:சில்லரை விற்பனைக்கு தடை என்ற அறிவிப்பு, வியாபாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால், எட்டு மாதங்கள், அனைத்து வியாபாரிகளும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டனர். மீண்டும் பாதிக்கப்படாமல் இருக்க, கடைகளை தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்.



'டாஸ்மாக்' கடைகள் மற்றும் தேர்தல் பிரசாரங்களால் தான் கொரோனா பரவியது. கோயம்பேடு வியாபாரிகளால் இல்லை.இங்குள்ள, 6,000 வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சிறு வியாபார கடைகளுக்கு தடைவிதிக்க கூடாது. மறுபரீசிலனை செய்து, மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X