மின் ஊழியர் உடலை வாங்க மறுத்து மறியல்: சம்பந்தி குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2021
13:20

மேச்சேரி: மின் ஊழியர் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், சம்பந்தி குடும்பத்தினர் நான்கு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


மேச்சேரி, பள்ளிப்பட்டி ஊராட்சி, நல்லியண்ணன் வீதியை சேர்ந்தவர் கோவிந்தன், 56. இவர், சேலம், உடையாப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில், மஸ்தூராக வேலை செய்தார். இவரது மகன் செல்வகுமார், 26, கோவை மாவட்டத்தில், மின்வாரிய கேங்மேனாக பணிபுரிகிறார். இவர், இரு ஆண்டுக்கு முன், பள்ளிப்பட்டியை சேர்ந்த சவுந்தர்யாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த, 4ல் செல்வகுமார், வீட்டில் இல்லாத நிலையில், சவுந்தர்யா யாரிடமோ மொபைல் போனில் பேசியுள்ளார். இதுகுறித்து கேட்டு, செல்வகுமாரின் தாய் பானுமதி, சவுந்தர்யாவிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து, தன் பெற்றோருக்கு சவுந்தர்யா தகவல் கொடுத்தார். அன்று, சவுந்தர்யாவின் தந்தை தமிழ்நிதி, தாய் சித்ரா, சகோதரர்கள் பிரசாந்த், கோகுல் ஆகியோர், செல்வகுமார் வீட்டுக்கு வந்தனர். அங்கு, அவர்களுக்கும், கோவிந்தனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், சவுந்தர்யாவின் உறவினர்கள், கோவிந்தனை தாக்கியுள்ளனர். காயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார். இரவு, 7:00 மணிக்கு, அவரது உடல், மேச்சேரிக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், சவுந்தர்யா உறவினர்களை கைது செய்யக்கோரி, உடலை வாங்க மறுத்து, மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே, கோவிந்தனின் உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேச்சேரி போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், கோவிந்தன் உடலை உறவினர்கள் வாங்கினர். இதுதொடர்பாக, தமிழ்நிதி, சித்ரா, பிரசாந்த், கோகுல் மீது, போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X