மேட்டூர் அணை நீர்மட்டம் திருப்தி; குறுவை சாகுபடிக்காக திறக்க வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2021
13:47

மேட்டூர் அணையின் நீர்மட்டம், திருப்திகரமாக இருப்பதால் வரும் ஜூன் மாதம், குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.



தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், நான்கரை கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ள, மேட்டூர் அணையில் இருந்து கடந்தாண்டு, ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு கடந்த, ஜனவரி, 28ல் மூடப்பட்டது. ஆனால், நூற்றுக்கணக்கான கூட்டு குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு, 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அப்போது அணையின் நீர்மட்டம், 105 அடியாகவும், நீர் இருப்பு, 72.78 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. குடிநீருக்காக தொடர்ந்து, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நேற்றைய நிலவரப்படி, 98 அடியாகவும், நீர் இருப்பு, 63.05 டி.எம்.சி.,யாகவும் உள்ளது.


இதுகுறித்து, டெல்டா பாசன விவசாயிகள் கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து, குடிநீருக்காக வினாடிக்கு, 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் வரும், ஜூன் இறுதி வரை, 10 டி.எம்.சி., தண்ணீர் வரை விடுவிடுக்க வேண்டும். இதனால் வரும் ஜூன் மாதம், 53 டி.எம்.சி., வரை தண்ணீர் இருப்பில் இருக்கும். மேலும், கர்நாடகா மாநிலத்தில், தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கினால், அணையின் நீர் இருப்பு மேலும் அதிகரிக்கும். இதனால் வரும் ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பதில் சிக்கல் இருக்காது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X