தினசரி ரூ.3 கோடி அபராதம் வசூலிக்க இலக்கு: முககவசம் அணியாதவர்கள் மிது வழக்கும் பாயும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2021
13:48

இன்று முதல், பொது இடங்களில் முக கவசம் அணியாதோர், வணிக நிறுவனங்களில், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாதோர் மூலம், தினமும், 3 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க, இன்று முதல், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும், வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி, போலீசில், அபராத வசூலுக்கு இலக்கு நிர்ணயித்து, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சிகள் மூலம் தினமும், 1.10 கோடி ரூபாய் வரை வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதில், சென்னை மாநகராட்சியில், பொது இடங்களில் முககவசம் அணியாமல் வருவோரிடம், தினமும், 10 லட்சம் ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயித்து, அதிகாரிகள், உதவி கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதேபோல், மற்ற மாநகராட்சிகளான, மதுரை, கோவையில், தலா, 10 லட்சம் ரூபாய், சேலம், 2 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாதோரிடம், தினமும், 45 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளின் நிலை இப்படியிருக்க, தமிழகம் முழுதும் உள்ள, 1,450 போலீஸ் ஸ்டேஷன்கள் மூலம், முக கவசம் அணியாத, 50 பேரிடம், தலா, 200 ரூபாய் வீதம், தினமும் அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 1.45 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், 1.55 கோடி, போலீஸ் சார்பில், 1.45 கோடி என, 3 கோடி ரூபாயை, மக்களிடம் இருந்து தினமும், அபராதமாக வசூலிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனாவை தடுப்பது தான் நோக்கம். இலக்கு நிர்ணயித்தால் தான், பொது இடங்களில் முக கவசம் இல்லாமல் செல்வோர் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர். அதனால், மக்கள் முககவசம் அணிந்து, கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும். இலக்கை பூர்த்தி செய்ய, அதிகாரிகள், களப்பணியாளர், போலீசார், மக்களிடம் எல்லை மீறி நடப்பதை தவிர்க்க, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன' என்றனர்.


- நமது சிறப்பு நிருபர் -


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X