கோரிக்கை! 'பைக்' ரோமியோக்கள் ஆட்டத்திற்கு ....போலீசார் கடிவாளம் போடுவது எப்போது?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
01:20

திருவொற்றியூர் : சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை பதறவைக்கும், 'பைக்' ரோமியோக்களின், 'ரேஸ்' ஆட்டத்திற்கு, போக்குவரத்து காவல்துறை கடிவாளம் போட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.




சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணுார் விரைவு சாலை, மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, காமராஜர் நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி., நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், வாகனப் போக்குவரத்து எப்போதும் அதிகம் காணப்படும். இச்சாலைகளில், விடுமுறை தினங்களில், மாலை மற்றும் இரவு நேரங்களில், இரு சக்கர வாகனங்களுடன், சாலையில் தாறுமாறாக பறக்கும் இளசுகளால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிரள்கின்றனர். சட்டென அதிக சத்தத்துடன் செல்லும் இரு சக்கர வாகனங்களால், மித வேகத்தில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் மிரண்டு, விபத்தில் சிக்குகின்றனர்.



மேலும் பல இடங்களில், இதுபோன்ற பைக்குகளில் வரும் மர்ம நபர்கள், வழிப்பறியிலும் ஈடுபடுகின்றனர். விடுமுறை தினங்கள் மட்டுமின்றி, தினசரி, மாலை, இரவு நேரங்களில், முக்கிய சந்திப்புகளில் இரும்பு தடுப்புகள் அமைத்து, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.மின்னல் வேகத்தில், அதிக சத்தத்துடன் சாலைகளில், தாறுமாறாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளை பிடித்து, கடுமையான அபராதம் விதிப்பதுடன், வழக்குப் பதிந்து, வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
12-ஏப்-202103:49:34 IST Report Abuse
NicoleThomson காவல்துறை இவர்களை கவனித்தால் கெட்டுப்போன ஊடகத்துறை மூலமாக காவல்துறையை அசிங்கப்படுத்துவோர் தான் இந்த ரோமியோக்களின் பாதுகாவலர்கள்
Rate this:
Cancel
Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா
11-ஏப்-202122:23:24 IST Report Abuse
Ram Mayilai மாமூல் என்னாவது? வாகனம் பறிமுதல் செய்தால் எங்களுக்கு என்ன லாபம்?
Rate this:
Cancel
Muga Kannadi - chennai,இந்தியா
11-ஏப்-202113:13:44 IST Report Abuse
Muga Kannadi இது டியோ புல்லிங்கோ பண்ற ஸ்டண்ட். இவனுகளை பின்னி பெடல் எடுக்கணும். அப்ப தான் திருதுவானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X