கோயம்பேடில் பெண்ணை எரித்த கள்ளக்காதலன் தீக்குளித்து தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
01:22

கோயம்பேடு : கோயம்பேடு பஸ் நிலையத்தில், பெண்ணின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, அவரின் கள்ளக்காதலனும் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.



கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தி, 46; தனியார் நிறுவன துாய்மை பணியாளர். ஏற்கனவே திருமணம் ஆன இவர், கோயம்பேடு பஸ் நிலைய நடைபாதையில் தங்கி, துப்புரவு பணி மேற்கொண்டு வந்தார். வடபழநி பஸ் நிலையத்தில், துாய்மை பணியில் ஈடுபட்டு வந்தவர், முத்து, 48. இவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது.இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை, 2:00 மணியளவில், கோயம்பேடு பஸ் நிலையத்தில் உறங்கிய சாந்தி மீது, முத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, அவரும் தீக்குளித்தார்.



திருமணம் ஆனவர்கள்இருவரும் உடலில் தீ பற்றிய நிலையில், அங்கும் இங்கும் ஓடியதை பார்த்த பயணியர், அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவரும், சிகிச்சை பலனின்றி, சில மணி நேரத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து, கோயம்பேடு போலீசார் விசாரித்தனர்.சாந்தி, முத்து ஆகிய இருவரும், ஏற்கனவே திருமணம் ஆனவர்கள். துாய்மை பணியில் ஈடுபட்ட போது, இவர்களுக்குள் கள்ளக்காதல் மலர்ந்தது. கள்ளத்தொடர்புஇந்நிலையில், சில மாதங்களாக, முத்துவை கழற்றிவிட்டு, வேறு ஒருவருடன் சாந்தி தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த முத்து, பெட்ரோல் ஊற்றி சாந்தியை எரித்துவிட்டு, தானும் தீக்குளித்தது தெரிய வந்தது. மேலும், உயிரிழந்தவர்கள் குறித்த, முழு விபரங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோயம்பேடு பஸ் நிலையத்தில், பெண்ணின் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, கள்ளக்காதலன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X