முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.3.36 லட்சம் அபராதம் வசூல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
22:56

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து, 3.36 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக, போலீஸ் எஸ்.பி., சுந்தரவதனம் தெரிவித்தார்.



வழக்குப்பதிவுசெங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி., சுந்தரவதனம் அளித்த செய்திக்குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம், வண்டலுார் ஆகிய துணை கோட்டங்களில், 25 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களில், கடந்த ஆண்டு, மார்ச் மாதத்தில் இருந்து, கடந்த மார்ச் வரை, முக கவசம் அணியாத, 39 ஆயிரத்து, 725 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 48.72 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.



கொரோனாவை கட்டுப்படுத்த, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும், முக கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்களுக்கு, அபராதம் விதிக்க, அரசு தற்போது உத்தரவிட்டது. இதையடுத்து, மாவட்ட முழுவதும், முக கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்கள் மீது, கடந்த, 8ம் தேதியிலிருந்து, நேற்று முன்தினம் வரை, 3,109 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 3.36 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.சமூக இடைவெளிஎனவே, கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க, அரசு, தனியார் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர், பொதுமக்கள் ஆகியோர், முககவசம், சமூக இடைவெளியை, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X