அவதி! அடுக்குமாடி வாகன நிறுத்தத்தை பயன்படுத்தாத பொதுமக்கள்... மாநகராட்சி அலட்சியத்தால் தொடருது நெரிசல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

12 ஏப்
2021
06:20
பதிவு செய்த நாள்
ஏப் 11,2021 23:07

பாண்டிபஜார் தியாகராய சாலையில், பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டும், தொடர்ந்து சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.வாகன நிறுத்தம் எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ, அது நிறைவேறாமல் போயுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துஉள்ளனர். 'ஸ்மார்ட் சிட்டி'சென்னை, பாண்டிபஜார் தியாகராய சாலை, எப்போதும் வாகன நெரிசலுடன் காணப்படும். மாநகரின் மையப்பகுதி யாகவும், வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாகவும் இருப்பதால், தினமும் ஆயிரக் கணக்கானோர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு வந்து செல்லும் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல், வாகன பாதையில் நிறுத்திவிட்டு சென்றனர்.இதனால், இரு வழிப்பாதையாக இருந்த தியாகராய சாலையில், போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இவற்றை தவிர்க்கும் வகையிலும், பாண்டிபஜாரை உலக தரத்திற்கு மாற்றும் வகையிலும், சென்னை மாநகராட்சி, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், விசாலமான நடைபாதை அமைக்கப்பட்டது. அதன்படி, 39.86 கோடி ரூபாய் மதிப்பில், சாலையின் இருபுறமும், 10 மீட்டருக்கு நடைபாதை வளாகம், மழை நீர் வடிகால், மின்சாரம், தொலைபேசி கட்டமைப்பு, குடிநீர் மற்றும் புதை சாக்கடை குழாய்கள் என, அனைத்தும் செல்லும் வகையில், முழுமையான சாலையாக கட்டமைக்கப்பட்டுள்ளன.மேலும், நடைபாதை வளாகத்தின் சுற்றுச்சுவர்களில், மக்களை கவரும் வகையில் வண்ணமிகு நிறங்களால் ஆன ஓவியங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், முதியவர்கள் அமரும் வகையில் இருக்கை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதனால், தியாகராய சாலை, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இந்நிலையில், தியாகராய சாலை - தணிகாசலம் சாலை சந்திப்பில், 40.49 கோடி ரூபாய் மதிப்பில், பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது. சுமார், 1,522 ச.மீ., பரப்பளவில், மூன்று தளங்களாக அமைக்கப் பட்டுள்ள, தானியங்கி அடுக்குமாடி வாகன நிறுத்தத்தில், 513 இரு சக்கர வாகனங்கள்; 222 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும், கட்டடத்தின் பெரும்பகுதிக்கு, சூரிய ஒளி மின் தகடு வாயிலாகவே, மின் வினியோகம் செய்யப்படுகிறது. கட்டணம் வசூலிப்புஅதோடு, ஓட்டுனர் தங்கும் அறை, கழிப்பறை, தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.இந்த நிறுத்தத்தில், நான்கு சக்கர வாகனத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு, 20 ரூபாய்; இரு சக்கர வாகனத்திற்கு, 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. வழக்கம்போல், சாலையின் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதற்கு, மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவன ஊழியர்கள், கட்டண வசூலில் வேறு ஈடுபட்டுள்ளனர். சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறதே தவிர, அதற்கு தீர்வு காணப்படவில்லை. இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:பாண்டிபஜார் தியாகராய சாலையில், பல அடுக்கு வாகன நிறுத்தம், நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக, சைக்கிள், இ - பைக் ஆகிய வசதிகளை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது.ஆனால், அவற்றை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. நேரடியாக கடைகளுக்கு எதிரே வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய மாநகராட்சி, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்து, சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, அதே கட்டணத்தை வசூலித்து வருகிறது.இதனால், பல அடுக்குமாடி வாகன நிறுத்தம், பெரிய அளவிலான பயன்பாடு இல்லாமல் உள்ளது. மேலும், தியாகராய சாலையில் பழையபடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு மாநகராட்சி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
12-ஏப்-202107:56:57 IST Report Abuse
S. Narayanan பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டுல ஆட்டுவது என்பது இது தான். Corporation ஆளுங்க செய்யர வேலை தான் இது. தினசரி அவர்களுக்கு வருமானம் வேண்டும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஏப்-202107:56:55 IST Report Abuse
தல புராணம் இவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய மாநகராட்சி, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்து, சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, அதே கட்டணத்தை வசூலித்து வருகிறது. லஞ்ச அரசு, தனியார், தனியார் ன்னு அலையும் சங்கி கூட்டத்தின் அடிமைகள். வேறு என்ன செய்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X