துவக்கம்! கொரோனா தடுப்பூசி திருவிழா.....100 இடங்களில் சிறப்பு முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2021
05:39

புதுச்சேரியில் தினம் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கின்றனர். தொற்று பரவலை தடுக்க சுகாதாரத் துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வசதியாக, நேற்று 11ம் தேதி முதல் வரும் 14ம் தேதி வரை, கொரோனா தடுப்பூசி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது.புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் 100 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடவும், 100 இடங்களில் கொரோனா பரிசோதனையும் நடக்கிறது.ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூதாய நலவழி மையங்கள், தனியார், அரசு பள்ளி வளாகங்களில் தடுப்பூசி முகாம் நேற்று துவங்கியது.



காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை முகாம் நடந்தது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், வயது உறுதி செய்ய ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு காண்பித்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.மையத்திற்கு வந்தவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதித்து, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதித்து, கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள், தேவையான மாத்திரைகள் எடுத்து கொண்டு, உடல்நிலை சீரான பின் தடுப்பூசி போட்டு கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர்.



பாக்கமுடையான்பட்டு ஆரம்ப பள்ளி, லாஸ்பேட்டை சுகாதார நிலையம், டான்போஸ்கோ பள்ளியில் நடந்த தடுப்பூசி திருவிழாவை கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் துவக்கி வைத்து அளித்த பேட்டி:கொரோனா தடுப்பூசி திருவிழாவிற்கு மக்கள் நல்ல ஆதரவு அளித்து வருகின்றனர். தடுப்பூசி எந்த விதத்திலும் பாதிக்காது என்ற நம்பிக்கையோடு வந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். பிரதமர் நரேந்திரமோடி, தடுப்பூசி திருவிழாவை துவக்கி வைக்கும்போது, ஒருவருக்கு ஒருவர் என்ற திட்டத்தையும் கூறியுள்ளார்.ஒருவர் தடுப்பூசி போட மற்றொருவர் உதவ வேண்டும்.



ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருக்க முக கவசம் அணிய உதவ வேண்டும்.மைக்ரோ அளவிலான கட்டுப்பாட்டு மண்டலங்களை கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கொரோனா தடுப்பூசி திருவிழா சிறப்பாக ஏற்பாடு செய்த அனைத்து துறையினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடு விதிப்பதை விட, மக்களே கட்டுப்பாடாக இருக்க வேண்டும். தொற்று பாதித்தவர்கள் வெளியே வந்தால் மற்றவர்களுக்கு நோய் பரப்புவோராக மாறி விடுவர். எனவே, அவர்களை குடும்பத்தினர் பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும்.



மீறி வெளியே வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு மட்டுமே எல்லாவற்றையும் செய்ய முடியாது. பொதுமக்களின் பங்களிப்பு நிச்சயமாக இருக்க வேண்டும்.கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மற்றவர்கள் பாதிக்காமலிருக்க தயவு செய்து தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும், கொரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, சுகாதாரத்துறை செயலர் அருண், கல்வித்துறை செயலர் அசோக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 7,172 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
12-ஏப்-202112:33:37 IST Report Abuse
J.Isaac தடுப்பூசி போடுவது திருவிழாவா? கேவலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X