இந்திரா, ராஜிவ் சதுக்கத்தில் தொடரும் விபத்துகள்: ரவுண்டானா அளவை குறைக்க நடவடிக்கை தேவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
04:33

புதுச்சேரி; விபத்துகளை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும் இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல் ரவுண்டானாக்களின் சுற்றளவை குறைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



புதுச்சேரியில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தவையாக இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல்கள் உள்ளன. விழுப்புரம், கடலுார் போன்ற ஊர்களில் இருந்து வரும் வாகனங்களும், சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வரும் வாகனங்களும் இந்த சிக்னல்களை கடந்தே செல்ல வேண்டும்.கடந்த 1.9.1993ல் அமைக்கப்பட்ட இந்திரா சிலை சிக்னல் வழியாக விழுப்புரம், கடலுார், புதுச்சேரி பஸ் நிலையம், சென்னை மார்க்க வாகனங்கள் கடந்து செல்லும் 4 பிரதான சாலைகள் இணைகின்றன.கடந்த 16.3.1996ல் அமைக்கப்பட்ட ராஜிவ் சிலை சிக்னல் வழியாக கடலுார் மார்க்கம், இ.சி.ஆர்., கோரிமேடு, வழுதாவூர், புதுச்சேரி நகர பகுதி களுக்கு செல்லும் வாகனங்கள் கடந்து செல்லும் 5 பிரதான சாலைகளும் சந்திக்கின்றன.இந்திரா சிலையை சுற்றிலும் நீரூற்று, சிறிய பூங்காவுடன் 12 அடி சுற்றளவில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. அதே போல் ராஜிவ் சிலையை சுற்றி சிறிய பூங்காவுடன் 10 அடி சுற்றளவில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. அதிக போக்குவரத்து இல்லாத அந்த கால கட்டத்தில் வாகன நெரிசல், விபத்து உள்ளிட்ட பிரச்னைகள் எழவில்லை.ஆனால் தற்போது வாகனங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளதால் இரண்டு ரவுண்டானாக்களிலும் போக்குவரத்து பிரச்னை எழுந்துள்ளது.ரவுண்டானா பெரிய அளவில் இருப்பதால் ஒரு திசையில் இருந்து, மற்றொரு திசைக்கு வாகனங்கள் கடந்து செல்லும் போது, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதற்கு, எதிர் திசையில் இருந்தும், பக்கவாட்டில் இருந்தும் வரும் வாகனங் கள் சரியாக தெரியாததுதான் காரணம். இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது.விபத்துக்களில் சிக்கி பலர் பலியாவதும், ஏராள மானோர் தினசரி காயமடைவதும் வாடிக்கையாகி விட்டது.மேலும், இந்திரா, ராஜிவ் சிலை ரவுண்டானாக்களில் ரிப்ளக்டர்கள் பொருத்தப்படவில்லை. இங்குள்ள மின் விளக்குகளும் சரிவர எரிவதும் இல்லை. பெரும்பாலான நேரங்களில் ரவுண்டானாக்கள் இருண்டு கிடக்கின்றன. இதனால், ரவுண்டானா சுவற்றில் வாகனங்கள் மோதி விபத்துகள் நடந்து வருகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி ஏற்படுகிறது.பகலில் போக்குவரத்து நெரிசலையும், இரவில் விபத்துகளையும் ஏற்படுத்தும், இரண்டு ரவுண்டானாக்களின் அளவை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், வாகனங்கள் எளிதாக சிக்னலை கடந்து செல்ல முடியும்.மேலும், சிலைகளை சுற்றி ரிப்ளக்டர்கள், மின் விளக்குகள் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேதமடைந்த ரவுண்டானாசென்னையில்இருந்து கடலுார் நோக்கி வந்த TN-05-BQ-4910 எண்ணுடைய கண்டெய்னர் லாரி, நேற்று காலை 5:00 மணிக்கு, ராஜிவ் சிக்னலின் நடுவில் உள்ள ரவுண்டானாவில் மோதி விபத்தில் சிக்கியது.அதிகாலை நேரம் என்பதால் அதிர்ஷ்ட வசமாக போக்குவரத்து அதிகம் இல்லை. லாரியை ஓட்டி வந்த கடலுாரைச் சேர்ந்த லாரி டிரைவர் காயம் ஏதும் இல்லாமல் தப்பினார். ரவுண்டானா தடுப்பு சுவர் இடிந்து சேதமடைந்தது.விபத்தில் சிக்கிய லாரியை, வடக்கு போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் மீட்டு, அப்புறப்படுத்தினர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari hara prabu - Puducherry,இந்தியா
14-ஏப்-202108:51:52 IST Report Abuse
Hari hara prabu இப்பொழுது இயக்கப்படும் சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் பேருந்துகள் ஆகியவற்றின் நீளம் அதிகரித்துள்ளது முந்தைய காலங்களுக்கு அதனால் இவ்வகையான நீளமான வாகனங்களை இந்த ரவுண்டானா கடந்து செல்லும் பொழுது அதன் ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் இதற்கு தகுந்த தீர்வு இந்த ரவுண்டானா கலை அகற்றிவிட்டு அதில் இருக்கும் சிலைகளை நான்கு முனைகளில் உள்ள ரோடு ஐலண்டில் வைக்கலாம் இதனால் சிலை அனைவரது பார்வையிலும் இருக்கும் அதே நேரத்தில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் எந்த சிரமமும் இருக்காது. ரவுண்டானாகளில் சுற்றுவட்ட பாதை லேன் பிரிக்காமல் குறுகலாகவும் உள்ளது இதனாலேயே யாரும் சுற்றுவட்டப் பாதையை உபயோகிக்காமல் குறுக்கு வழியாகவே செல்ல வேண்டி இருக்கிறது இதைப்போலவே மறைமலை அடிகள் சாலை அந்தோணியார் கோவில் கடலூர் ரோடு சந்திப்பு ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசலை உண்டாக்குகிறது.மரப்பாலம் பகுதியில் கடலூர் சாலை 100 அடி ரோடு சந்திப்பில் மும்முனை ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X