மகன் குடும்பத்தை தாக்கிய தந்தை, சகோதரர் மீது வழக்கு | செய்திகள் | Dinamalar
மகன் குடும்பத்தை தாக்கிய தந்தை, சகோதரர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
04:35

புதுச்சேரி; வீட்டை காலி செய்ய கூறி மகன் குடும்பத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தந்தை, சகோதரர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி காராமணிக்குப்பம் மாரியம்மன் நகரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன்கள் சிவக்குமார், 45 ; பாபு , 42; வீட்டின் தரைத் தளத்தில் தந்தை கதிரேசன், முதல் தளத்தில் பாபுவும், 2வது தளத்தில் சிவக்குமார் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.சிவக்குமாருக்கும் அவரது தந்தை மற்றும் சகோதரர் குடும்பத்தினரிடையே தகராறு இருந்தது. கடந்த 28ம் தேதி இரவு சிவக்குமார் வீட்டிற்கு சென்ற கதிரேசன், பாபு ஆகியோர், வீட்டை காலி செய்யும்படி மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது சிவக்குமாரை , இரும்பு கம்பி, குச்சியால் கதிரேசன், பாபு தாக்கினர்.தடுத்த அவரது மனைவி கல்பனா, மகள்கள் சிந்துஜா, யோகபிரபா ஆகியோரையும் தாக்கினர். காயமடைந்த நால்வரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசtார் கதிரேசன், பாபு ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X