கலக்கம்: பெண்களின் ஆதரவு யாருக்கு?அலசி ஆராயும் அரசியல் கட்சிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
04:39

புதுச்சேரி; அதிக எண்ணிக்கையில் பெண் வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளது யாருக்கு சாதகம்என்பது குறித்து அரசியல் கட்சியினர் அலசி ஆராய்ந்து வருகின்றனர்



.புதுச்சேரி மாநில வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர். ஆண்களைவிட, பெண்கள் 58 ஆயிரம் பேர் கூடுதலாக உள்ளனர்.இதன் காரணமாக, பெண் வாக்காளர்களை குறி வைத்து அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அவர்களை கவரும் வகையில் போட்டிபோட்டு அறிவிப்புகளை வெளியிட்டனர். தாய்குலங்களுக்கு ஏராளமான திட்டங்கள்செயல்படுத்தப்படும் என்றும் வாக்குறுதிகள் வாரி வழங்கப்பட்டது.



பா.ஜ., - காங்., - என்.ஆர். காங்., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் புதுச்சேரியில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பெண்களுக் கான ஏராளமான திட்டங்கள் வரிசைக்கட்டி இடம் பெற்றிருந்தன. அதுபோல, தமிழகத்தில் வெளியிடப்பட்ட அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் மகளிரை கவரும் திட்டங்கள் ஏராளமாக இடம் பெற்றிருந்தன.இந்நிலையில், புதுச்சேரியில் நடந்து முடிந்த தேர்தலில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 490 ஆண்களும், 4 லட்சத்து 36 ஆயிரத்து 867 பெண்களும் ஓட்டளித்துள்ளனர்.இதில் ஆண் வாக்காளர் களைவிட கூடுதலாக 53 ஆயிரத்து 377 பெண்கள் ஓட்டளித்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 1500ல் இருந்து 2000 வரை பெண்களே கூடுதலாக ஓட்டளித்துள்ளனர்.லோக்சபா தேர்தலில் ஓட்டு வித்தியாசம் பல ஆயிரம் என்ற அளவில் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் லட்சக்கணக்கிலும் வித்தியாசம் இருக்கும். சட்டசபை தேர்தலை பொறுத்தவரை சில தொகுதிகளை தவிர்த்து, பல தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் சில ஆயிரம் என்ற அளவிலேயே இருப்பது வழக்கம். குறிப்பாக, மும்முனை போட்டி நிலவும் தொகுதிகளில் வித்தியாசம் மிக குறைவாகவே இருக்கும்.இந்நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் ஆண்களை மிஞ்சும் வகையில் ஓட்டளித்துள்ள பெண் வாக்காளர்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். பெண்களே வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளனர். பெண்கள் ஓட்டு யாருக்கு கிடைத்துள்ளது என, அரசியல் கட்சியினர் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.ஒவ்வொரு தொகுதியிலும் களத்தில் உள்ள வேட்பாளர்களும், பெண்களின் ஆதரவு தங்களுக்கு கிடைத்திருக்குமா என பல கணக்குகளை போட்டு வருகின்றனர்.



பலர் துாக் கத்தை தொலைத்து கலக்கத்தில் உள்ளனர். இதற்கான விடை, வரும் 2ம் தேதி ஓட்டுப் பெட்டிகளை திறக்கும்போது மட்டுமே வெட்ட வெளிச்சமாகும்.பெண்களே வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளனர். எனவே, பெண்களின் ஓட்டு யாருக்கு கிடைத்துள்ளது என, ஒவ்வொரு தொகுதியிலும் களத்தில் உள்ள வேட்பாளர்கள் பல்வேறு கணக்குகளை போட்டு பார்த்து, துாக்கத்தை தொலைத்து கலக்கத்தில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X