ஒரே நாளில் 512 பேருக்கு தொற்று புதுச்சேரியில் புதிய உச்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
04:39

புதுச்சேரி; புதுச்சேரியில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை, 191 நாட்களுக்கு பிறகு மீண்டும் 512 ஆக உயர்ந்துள்ளது.புதுச்சேரியில் கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் உச்சம் தொட்ட கொரோனா தொற்று, நவம்பர், டிசம்பர் மாதத்தில் குறைய துவங்கியது. பின், தினசரி 20 முதல் 50 ஆக பதிவான தொற்று கடந்த 15 நாட்களில் வேகமாக அதிகரித்தது. நேற்று முன்தினம் புதுச்சேரியில் 3451 பேருக்கு நடத்திய பரிசோதனையில், புதுச்சேரியில் 403, காரைக்காலில் 86, ஏனாமில் 16, மாகி 7 பேர் உட்பட 512 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு, 44 ஆயிரத்து 555 ஆனது.புதுச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி, 510 பேர் பாதித்தனர். பின், 191 நாட்களுக்கு பிறகு, தற்போது புதுச்சேரியில் 512 பேர் பாதித்துள்ளனர்.மருத்துவமனையில் 547 பேரும், 2047 பேர் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 232 பேர் குணமாகி வீடு திரும்பினர். இது வரை 41 ஆயிரத்து 268 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புதுச்சேரி ஆனந்தா நகரைச் சேர்ந்த 69 வயது பெண், காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அக்கரைவட்டம், காமராஜர் வீதியைச் சேர்ந்த 53 வயது ஆண் இறந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு 698 ஆக அதிகரித்துள்ளது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும், புதுச்சேரியில் 2016 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X