உர விலையை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் | கடலூர் செய்திகள் | Dinamalar
உர விலையை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
06:05

கடலுார்- உர விலையை கட்டுப்படுத்தக்கோரி, கடலுாரில் விவசாய வயலில் இறங்கி, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.விவசாய உரங்களின் விலையை மத்திய அரசு கடுமையாக உயர்த்தி உள்ளதை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கடலுார் குப்பங்குளம் விவசாய வயலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சங்க மாவட்டக் குழு உறுப்பினர் பழனி தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், பொருளாளர் தட்சணாமூர்த்தி, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் கருப்பையா, நகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் ராஜேஷ்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X