நசிந்து வரும் வெற்றிலை விவசாயம்; ஊக்குவிக்க விவசாயிகள் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
06:10

பெரியபட்டினம் : முத்துப்பேட்டை கடற்கரையோரப் பகுதிகளில் பயிரிடப்பட்ட வெற்றிலை விவசாயம் தற்போது நசிந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



முத்துப்பேட்டை, பெரியபட்டினம் உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடற்கரையோர கிராமங்களில் வெற்றிலை விவசாயம் செய்யப்படுகிறது. முன்பு 100 ஏக்கருக்கு மிகாமல் பயிரிடப்பட்ட வெற்றிலை தற்பொழுது 20 ஏக்கரில் மட்டுமே பயிரிடப்பட்டுஉள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள தென்னந்தோப்புகள்நிறைந்த பகுதிகளில் நிலத்தடி நீர் சுவையானதாகவும் சில அடி துாரத்திலேயே கிணறுகளில் தண்ணீர் கிடைக்கிறது.பெரும்பாலும் கிணற்றுபாசனத்தின் மூலம் விளைவிக்கப்படும் அகத்திக்கீரை மரங்களுக்கு ஊடுபயிராக வெற்றிலை கொடிக்கால் வளர்க்கப்படுகிறது.



வெற்றிலை விவசாயிகள்கூறியதாவது:முத்துப்பேட்டை, பெரியபட்டினம் பகுதியில் இருந்து வெற்றிலைகள் தினமும் பறிக்கப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. வெற்றிலை கொடிகளை பராமரிப்பதற்கு அதிக செலவு ஏற்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் வெற்றிலை பயிரிட முடியாமல் வறட்சியால் பட்டுப் போயின.கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பெய்த மழையால் ஓரளவுக்கு வெற்றிலை கொடிகளை சமாளிக்க முடிகிறது.



பராமரிப்பு அதிக அளவு தேவைப்படுகிறது. கூலியாட்களுக்கான சம்பளம் முன்புபோல் எங்களால் கொடுக்க முடியவில்லை.பெயரளவிற்கு விவசாயம் செய்யும் நிலை ஏற்பட்டுஉள்ளது.தோட்டக்கலை துறையினர் வெற்றிலை விவசாயம் முழுமையாக செல்வதற்கு உரிய ஆலோசனையும், மானிய உதவிகளை வழங்கினால் இப்பகுதியில் வெற்றிலை விவசாயம் சிறப்பாக இருக்கும் என்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X