கிரைம் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
06:12

பீர் பாட்டிலால் குத்தியவர் கைதுவிருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுாரைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை, 23; வேல்முருகன், 21; இவர்களுக்குள் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில், வேல்முருகன் ஆத்திரமடைந்து ஏழுமலையை பீர் பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, வேல்முருகனை கைது செய்தனர்.

ஆபாச பேச்சு: ஒருவர் கைதுவிருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் நேற்று தென்கோட்டை வீதி பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது மேட்டுகாலனியைச் சேர்ந்த வீரச்செல்வன், 37; அப்பகுதி மக்களை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வீரச்செல்வனை கைது செய்தனர்.

மணல் கடத்தியவருக்கு வலைநடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த திருமாணிக்குழியைச் சேர்ந்த கிருஷ்ணன், வண்டியை விட்டு விட்டு தப்பியோடினார்.

போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து, கிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

பைக் திருட்டு: மர்ம நபருக்கு வலைவிருத்தாசலம்: மங்கலம்பேட்டை அஜீஸ் நகரைச் சேர்ந்தவர் தேவேந்திரன், இவர், தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த பைக் கடந்த மாதம் 27ம் தேதி இரவு திருடு போனது. புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சூதாடிய மூவர் கைதுநடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலையடிக்குப்பம் முந்திரி தோப்பில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த கந்தன், 37; காளிதாஸ், 51; வெங்கடாசலம், 62; ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

சாலையில் அலம்பல் செய்தவர் கைதுபண்ருட்டி: பனிக்கன்குப்பம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் எதிரே பண்ருட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன், 40; சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபசமாக பேசி, அவ்வழியே சென்றவர்களை கல்லால் தாக்கினார். காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திகேயனை கைது செய்தனர்.

அடையாளம் தெரியாதவர் சாவுகடலுார்: கடலுார் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் முன் கடந்த 5ம் தேதி 60 வயது முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் கடந்த 9ம் தேதி இறந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. காவி நிறத்தில் வேட்டியும், வெளிர் நீலத்தில் வெள்ளைக் கோடு போட்ட அரை கை டி.சர்ட்டும் அணிந்திருந்தார். கடலுார், புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X