கடத்தல் பகுதியாக மாறும் ராமேஸ்வரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
06:16

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை, கஞ்சா கடத்தல் தாராளமாக நடக்கிறது. மேலும் தீவுக்குள் கள்ளத்தனமாக கஞ்சா, மது தாராளமாக விற்பதால், இத்தீவு சமூக விரோத செயலுக்கு உகந்த இடமாக மாறி வருகிறது.



ராமேஸ்வரம், பாம்பன்,தங்கச்சிமடத்தை உள்ளடக்கிய இத்தீவில்ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமநாதசுவாமி கோயில் மற்றும் ராமர் பாதம் கோயில், பாம்பனில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு மண்டபம் உள்ளது



இத்தீவின் சிறப்பு அம்சமாகும். புனிதம், சுற்றுலாவுடன் விளங்கும் இத்தீவுக்கு ஓராண்டுக்கு (கொரோனாவுக்கு முன்) 1.05 கோடி பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.பல கோடிக்கு கடத்தல்மத்திய அரசு தடை செய்த கடல் அட்டையை ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் சிலரிடம் பிடித்து வர சொல்லி வலியுறுத்தும் கடத்தல்காரர்கள், அதனை மறைவான இடத்தில் உலரவைத்து பிளாஸ்டிக் மூடையில் பேக் செய்து கள்ளபடகில் இலங்கைக்கு கடத்தி செல்கின்றனர்.



இலங்கையில் ஒரு கிலோ கடல் அட்டை ரூ.25 முதல் 30 ஆயிரத்திற்கு விற்பதால் ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து பல டன் கணக்கில் தடையின்றி கடத்தி செல்கின்றனர்.இந்த கடல்அட்டைகள் இலங்கையில் இருந்து கப்பல் மூலம் ஜப்பான், கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாவதால், பல கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது.



ஏப்.,11 ல் ராமேஸ்வரம், மண்டபத்தில் போலீசார் பறிமுதல் செய்த ரூ.1.10 கோடி மதிப்பில் கடல் அட்டை ஒரு சதவீதம் மட்டுமே.கடல் வளத்தை பாதுகாக்க கடல் அட்டை கடத்தலை தடுக்கும் போலீசார், மனித உயிர்களை போதை எனும் அரக்கன் மூலம் காவு வாங்கும் கஞ்சா, மது விற்பனையை தடுக்க போலீசார் பாராமுகமாக இருப்பது வேதனைக்குரியது.



ராமேஸ்வரம் தீவு, மண்டபம் பகுதியில் போதை வஸ்துகளை விற்க 200க்கு மேலான ஏஜன்ட்கள் உள்ளனர்.இந்நிலை நீடித்தால் ஒருசில ஆண்டுக்கு பின் புனித நகர் போதை வஸ்துகளின் புகலிடமாக மாறி, எங்கு பார்த்தாலும் போதை இளைஞர்கள் சுற்றி திரியும் அவலம் உருவாகும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X