வேளச்சேரியில் மீட்கப்பட்ட இடத்தை சுற்றி சுற்றுச்சுவர்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

13 ஏப்
2021
07:03
பதிவு செய்த நாள்
ஏப் 13,2021 06:50

வேளச்சேரி; வேளச்சேரியில், மீட்கப்பட்ட, 20 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை பாதுகாக்க, சுற்றுச்சுவர் கட்ட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நலச்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.அடையாறு மண்டலம், 179வது வார்டு, வேளச்சேரி, புவனேஸ்வரி நகரில், சர்வே எண்: 317-1 மற்றும் மனை ஒதுக்கீடு எண்: 152-1973ல், பொது பயன்பாட்டுக்கு, 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இடம் ஒதுக்கப்பட்டது.சுற்றி வீடுகள் இல்லாததால், இந்த இடத்தை, இரண்டு பேர் சேர்ந்து ஆக்கிரமிக்க முயன்றனர். அதில், ஒரு நபருக்கு, 2016ம் ஆண்டு, மாநகராட்சியின் ஆட்சேபனையை மீறி, வேளச்சேரி தாசில்தார் பட்டா வழங்கினார்.இது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. சென்னை மாநகராட்சி உரிய ஆவணங்களை, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.பட்டாவை ரத்து செய்து, தாசில்தாரை பணி இடைநீக்கம் செய்ய, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.மேல் முறையீட்டில், இடத்தின் வகைப்பாடு மற்றும் ஆவணங்களை பரிசீலித்து, மாநகராட்சி, தெற்கு வட்டார துணை ஆணையர், உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு மற்றும் ஆவணங்கள் அடிப்படையில், இடத்தை கைவசப்படுத்த, 2020 பிப்ரவரி, தெற்கு வட்டார துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், ஆக்கிரமிப்பாளருக்கு வழங்கிய, கணினி பட்டாவை ரத்து செய்ய வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.இரண்டு முறை, பூங்கா அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தபோது, ஆக்கிரமிப்பாளர், கணினி பட்டாவை காட்டி, பணியை நிறுத்தினர். இந்நிலையில், கடந்த மாதம், மாநகராட்சி அதிகாரிகள், தேர்தல் பணியில் மும்முரமாக இருந்தனர்.இதை சாதகமாக்க முயன்ற ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர், 20 கோடி ரூபாய் மதிப்பிலனா, 14 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இடத்தை ஆக்கிரமித்து, இரவில் சுற்றி சுற்றுச்சுவர் கட்டினார்.போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள், சுற்றுச்சுவரை இடித்து, இடத்தை தன்வசப்படுத்தினர். ஆனால், மாநகராட்சி இடம் என, பெயர் பலகை வைக்கவில்லை.இதனால், 20 கோடி மதிப்புள்ள இடம், மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்க வாய்ப்புள்ளது. இதை தடுக்க, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, வேளச்சேரி பகுதி நலச்சங்கங்கள் கூறியதாவது:மாநகராட்சி அதிகாரிகளின் தீவிர முயற்சியால் தான், நீதிமன்றம் வழியாக இடத்தை மீட்க முடிந்தது. இருந்தும், சில அதிகாரிகளின் அலட்சியத்தால், இடம் மீண்டும் ஆக்கிரமிப்பாளர் வசம் சிக்க வாய்ப்புள்ளது. மீட்ட உடன், மாநகராட்சி எச்சரிக்கை பலகை வைத்திருக்க வேண்டும்; அதுவும் செய்யவில்லை. சுற்றி சுற்றுச்சுவர் கட்டி, இடத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X