உயர்வு! நிலத்தடி நீர்மட்டம் 1.66 மீட்டர்...மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
22:19

கடலுார் : கன மழை காரணமாக கடந்த ஆண்டை விட 1.66 மீட்டர் நீலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், கடலுார் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



தமிழகத்தில் பருவ மழை பொய்த்து வருவதாலும், பருவம் தவறி பெய்வதாலும் ஆண்டு தோறும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கை. அந்த வகையில், 2019ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை போதுமான அளவில் இல்லாததால், கடலுார் மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து, ஆழ்குழாய் மூலம் கூட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில் அவதியடைந்தனர்.ஆனால், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரையில் கடலுார் மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது.



மேலும், நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாகவும் மழை பொழிவு அதிகமாக இருந்தது. அத்துடன், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலுார் மாவட்டத்தில் கடந்த பிப்., 21ம் தேதி வரலாறு காணாத மழை பெய்தது. கடலுாரில் 24 மணி நேரத்தில் 30 செ.மீட்டர் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 162 செ.மீட்டர் மழை பதிவாகியது. இது, 90 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த மிக அதிக மழையாகும். இதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இதனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டும் உயர்ந்து உள்ளது.



மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் நடத்திய ஆய்வில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை காட்டிலும் இந்தாண்டு 1.66 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம், கடலுார் மாவட்டத்தில் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாவட்டத்தில் நீர்மட்டம் 5.39 மீட்டராக இருந்தது. தற்போது இந்த ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டை விட உயர்ந்து 3.73 மீட்டர் ஆழத்திலேயே தண்ணீர் கிடைக்கிறது. இதனால் கடலுார் மாவட்ட விவசாயிகள் வெகுவாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பெய்த மழை காரணமாக, மொத்தமுள்ள 36 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.



அதில், பெரம்பலுார், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 3 மீட்டருக்கு மேல் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X