கொரோனா பாதித்த பெண் பலி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
கொரோனா பாதித்த பெண் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
22:31

விக்கிரவாண்டி : கொரோனாவால் பாதித்த பெண் இறந்ததை தொடர்ந்து கிராமத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.



விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பத்தை சேர்ந்தவர் பெரியசாமி,42: விவசாய தொழிலாளி. இவரது மனைவி சுமதி,39; கடந்த, 18ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.கொரோனா நோய் தொற்றால் இறந்ததால், உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல், போலீஸ் பாதுகாப்புடன் தனி இடத்தில் அவரது சமுதாய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.நோய் தொற்று பாதிக்கப்பட்ட பொன்னங்குப்பம் கிராமத்தில் விக்கிரவாண்டி வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமையிலான மருத்துவ குழுவினர் கிருமி நாசினி தெளித்து, சுகாதார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X