சாதகம் ! ஓட்டுப்பதிவு சதவீதம் யாருக்கு..... விழி பிதுங்கி நிற்கும் வேட்பாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
22:33

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுப்பதிவு சதவீதம், யாருக்கு சாதகம், பாதகம் என தெரியாமல் அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.



தமிழகத்தில் 16வது சட்டசபை தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. இதற்கான தேர்தல் முடிவு வரும் மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கையின்போது வெளியிடப்படும். இத்தேர்தலில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திருக்கோவிலுார், விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானுார் (தனி) ஆகிய ஏழு தொகுதிகளில் அ.தி.மு.க.,-தி.மு.க.,-அ.ம.மு.க.,-மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் பிற அரசியல் கட்சி, சுயேட்சை என 102 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதில், மாவட்டத்தில் உள்ள செஞ்சி தொகுதியில் 13 பேர், திண்டிவனம் (தனி) 15 பேர், வானுார் (தனி) 7 பேர், விழுப்புரம் 25 பேர், விக்கிரவாண்டி மற்றும் திருக்கோவிலுார், மயிலம் தலா 14 பேர் இடம் பெற்றிருந்தனர்.



மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் 2,368 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க.,வில் சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களான விழுப்புரத்தில் அமைச்சர் சண்முகம், வானுார் சக்கரபாணி, விக்கிரவாண்டி முத்தமிழ்செல்வன் மற்றும் தி.மு.க.,வில் சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களான திருக்கோவிலுார் பொன்முடி, மயிலம் மாசிலாமணி, செஞ்சி மஸ்தான், திண்டிவனம் சீத்தாபதி சொக்கலிங்கம் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.சதவீதம் மாவட்டத்தில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 164 ஆண்கள் மற்றும் 8 லட்சத்து 53 ஆயிரத்து 716 பெண்கள், 215 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 16 லட்சத்து 89 ஆயிரத்து 095 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.



இதில், கடந்த 6ம் தேதி நடந்த தேர்தலில், மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 254 ஆண்கள், 6 லட்சத்து 62 ஆயிரத்து 615 பெண்கள் மற்றும் 35 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 13 லட்சத்து 27 ஆயிரத்து 904 பேர் தங்கள் ஓட்டை பதிவு செய்துள்ளனர். மாவட்டத்தில் மொத்த ஓட்டுப் பதிவு சதவீதம் 78.62 ஆகும். இதில், கடந்த 2016 சட்டசபை தேர்தலில் செஞ்சியில் 79.42, மயிலம் 80.35, திண்டிவனம் 78.47, விழுப்புரம் 76.40, விக்கிரவாண்டி 81.24, வானுார் 78.53, திருக்கோவிலுார் 78.18 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. ஓட்டுப்பதிவு இதில், கடந்த 6ம் தேதி நடந்த தேர்தலில் திருக்கோவிலுாரில் 1.91, செஞ்சியில் 1.01, திண்டிவனத்தில் 0.04, மயிலத்தில் 0.81 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.



மேலும், விழுப்புரத்தில் 0.57, வானுாரில் 1.26, விக்கிரவாண்டியில் 0.15 சதவீதம் கூடுதலாக ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.தேர்தல் ஓட்டுப்பதிவில் குறைந்துள்ள மற்றும் அதிகரித்துள்ள ஓட்டு சதவீதம் யாருக்கு சாதகமாக இருக்கும் அல்லது பாதகமாக இருக்கும் என தெரியாமல், சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.ஏனெனில், சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மக்களிடம் நற்பெயர் பெற்றதால், ஓட்டு சதவீதம் கூடுதலாக பதிவாகியதா அல்லது சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் மீது உள்ள அதிருப்தியில் எதிர் கட்சி வேட்பாளர் களுக்கு ஆதரவாக அதிக ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதா என தெரியாமல், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விழி பிதுங்கியுள்ளனர்.எனவே, ஓட்டு எண்ணிக்கை தினமான மே 2ம் தேதி வரை மாவட்டத்தில் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்கள் திக்... திக்... மனநிலையில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X