சிதம்பரம் அருகே கள்ளக்காதலால்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
22:42

சிதம்பரம் : சிதம்பரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தாயை சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த லால்புரம், தொடர்ந்தாள் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன், 48; கவரிங் நகை பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா, 40: இவர்களது 15 வயது மகன் சிதம்பரம் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்புபடிக்கிறார்.சங்கீதாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு நபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கீதாவை அவரது கணவர் மற்றும் மகன் கண்டித்துள்ளனர். ஆனாலும் சங்கீதாவின் கள்ளத்தொடர்பு நீடித்துள்ளது.இந்நிலையில், சங்கீதா வெளியே சென்று நேற்று மதியம் தனது வீட்டிற்கு அம்மன் கோவில் வீதி வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கு மறைந்திருந்த அவரது மகன் தன் கையில் வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் சங்கீதாவை சரமாரியாக குத்தினார்.



குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சங்கீதா, அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். அதனைத் தொடர்ந்து சிறுவன் சிதம்பரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்துவிசாரித்து வருகின்றனர்.'அவமானத்தால் கொன்றேன்'தாயை கொலை செய்த மகன் கூறுகையில், 'என் தாயின் தவறான செயல் எனக்கு அசிங்கத்தை ஏற்படுத்தியது. எனது ஏரியாவில் சக மாணவர்கள் என்னை கேலி செய்தனர். பலர் என் குடும்பத்தை தரக்குறைவாக பேசினர். என் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தால் எனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் தாயை கத்தியால் குத்தி கொன்றேன்' என்றார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X