நடவடிக்கை! 'கொரோனா' பன்மடங்கு வேகம்...நோய் பாதிப்பு குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மும்முரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

14 ஏப்
2021
06:37
பதிவு செய்த நாள்
ஏப் 13,2021 23:07

சென்னை : சென்னையில், 'கொரோனா' தொற்றால் பாதிக்கப்பட்ட, 18 ஆயிரம் பேர், மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளில், 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணியில், மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தொற்று பாதிப்புக்குள்ளான நபர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில், கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட, தற்போது, தொற்று பரவும் வேகம் அதிகரித்து, தினசரி, 2,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பின் தீவிரத்தால், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.



சென்னையில் தொற்றை கட்டுப்படுத்த, தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக, மண்டல வாரியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், அலட்சியம் காட்டும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கொரோனா தொற்று அறிகுறியுடன், பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள், தொற்று பாதித்தவர்கள் வீடுகளில், மாநகராட்சி சுகாதாரத்துறையினர், 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.



இது குறித்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், மருத்துவ மனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அவர்களின் வீடுகளில், கொரோனா தொற்றுக்கான, 'ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது. அதில், தொற்று பாதிப்புக்குள்ளானோர் பெயர், வயது, முகவரியுடன் விபரம் இடம்பெறும். அதன்படி, கொரோனா அறிகுறியுடன், பரிசோதனை மேற்கொண்டவர் வீடுகளில், 'பச்சை நிற ஸ்டிக்கர்', பாதித்தவர்கள் வீடுகளில், 'பிரவுன் கலர் ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது. மேலும், இவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுவதுடன், வீட்டை விட்டு வெளியே வருவதும் தடுக்கப்படுகிறது.



இவர்களுக்கு சேவை செய்ய, 6,000 களப்பணியாளர்கள் உள்ளனர். அரசின் தீவிர கட்டுப்பாடு களால், விரைவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர். அடுக்குமாடி குடியிருப்பில்51 பேருக்கு பாதிப்புதண்டையார்பேட்டையில் உள்ள, பிரின்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு - 1ல், 10 பேரும்; அதே வளாகம், 2ல், 21 பேரும்; கொருக்குப்பேட்டை, வித்யாசாகர் ஒஸ்வால் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில், 8 பேரும்; தண்டையார்பேட்டை, இ.எம்.ஆர்., அடுக்குமாடி குடியிருப்பில், 12 பேர் என, ஒரு வாரத்தில், 51 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தண்டையார்பேட்டை மண்டலத்தில், இதுவரை, 826 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும், 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டான்லியில், 400 பேர் 'அட்மிட்' வட சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 400 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில், 25 பேர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



சித்த மருத்துவ நிறுவனத்தில்டாக்டர்களுக்கு கொரோனாதாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரியும், பட்ட மேற்படிப்பு மாணவருக்கு, சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானது.அவருடன் தொடர்பில் இருந்த, நான்கு மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கும் பாதிப்பு உறுதியானதால், ஐந்து பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும், ஒரு பெண் டாக்டர், கார் ஓட்டுனர் மட்டுமின்றி, மருந்தகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என, 10க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டிலும், நிறுவனத்தில் உள்ள, விடுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.



அதிகாரிகள் புலம்பல் : தாம்பரம் சானடோரியத்தில் உள்ள, 'மெப்ஸ்' பொருளாதார மண்டலத்தில், பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை என, தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா பரிசோதனை நடத்த, அங்குள்ள, அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வளசரவாக்கத்தில் ரூ.70 ஆயிரம் வசூல்வளசரவாக்கம் மண்டலத்தில், கொரோனா விதிமீறலில் ஈடுபட்டோரிடம், 70 ஆயிரத்து, 800 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.



மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொரோனா தடுப்பு விதிமீறலில் ஈடுபடுவோரிடம் அபராதம் வசூலிக்க, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், குன்றத்துார் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக கவசம் இல்லாமல் சுற்றுவோரிடம், அபராதம் வசூலித்து வருகிறோம். கடந்த, மூன்று நாட்களில், வீதிமீறலில் ஈடுபட்ட, 25 கடைகள் மற்றும் 180 தனிநபர்களிடம் இருந்து, 70 ஆயிரத்து, 800 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். சங்கிலியை துண்டிப்போம்போலீஸ் கமிஷனர் அழைப்பு''அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கொரோனா பரவலுக்கான சங்கிலி தொடரை துண்டிப்போம்,'' என, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேசினார்.



சென்னை, தேனாம்பேட்டை தாமஸ் சாலையில், போலீசார், பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதில், கலை நிகழ்ச்சி வாயிலாக, கொரோனா விழிப்புணர்வு செய்யப்பட்டது.முகாமை துவக்கி வைத்த, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேசியதாவது:கடந்தாண்டு உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவை கட்டுப்படுத்தி, பெரும் வெற்றி கண்டோம். இதற்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பே காரணம். தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அரசு வெளியிட்ட நெறிமுறைகளை கடைப்பிடித்தோம்.



அதனால், கட்டுக்குள் கொண்டு வந்தோம்.தற்போது, கொரோனா பரவல் மீது, மக்களிடம் ஒரு விதமான அலட்சியம் ஏற்பட்டு விட்டது. இனியும் அலட்சியம் கூடாது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் என, மக்கள் அனைவரும், அரசின் நெறிமுறைகளை பின்பற்றி, கொரோனா பரவலுக்கான சங்கிலி தொடரை துண்டிப்போம்.சென்னையில் இதுவரை, 3,300 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
14-ஏப்-202109:59:39 IST Report Abuse
S. Narayanan எலக்சன் என்ற பெயரில் மக்களை கூட்டி காரோனாவை பரவ விட்டு இப்போது மக்களை முட்டாளாக்கி ஏமாற்றி பாடாய் படுத்தி பணத்தையும் பிடுங்கி எடுப்பது எப்படி நியாயம் ஆகும். மொத்தத்தில் கொறோன அனுபவிப்பது பணத்தை இழப்பதும் மக்களே.
Rate this:
15-ஏப்-202105:33:28 IST Report Abuse
மனுநீதிஅந்த அக்கறையில் பாதி மக்களுக்கும் இருக்க வேண்டும்.எந்த வித கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் பெயரளவில் வாய்க்கு மட்டும் கவசம் போட்டுகொண்டு தன்னையும் ஏமாற்றி, ஊரையும் ஏமாற்றுவது மட்டும் சரியா? இதில் என்ன கொடுமை என்றால், கோரோணாவில் இறந்ததைக்கூட மாரடைப்பால் இறந்தார் என்று சான்றிதழ் பெற்று ஊரைக்கூட்டி இறுதி ஊர்வலம் செய்யும் அவலமும் இப்போது நடக்கிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X