பெங்களூரு காதல் ஜோடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
23:17

பெரும்பாக்கம் : பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பெங்களூரைச் சேர்ந்த காதல் ஜோடி, சென்னையில் தற்கொலை செய்து கொண்டது.



சென்னை, சித்தாலப்பாக்கம், அரசன்கழனி பிரதான சாலையில் உள்ள, ஒரு தனியார் குடியிருப்பு அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு, 30 வயது ஆணும், ஒரு பெண்ணும் இறந்து கிடந்தனர்.தகவலறிந்து வந்த, பெரும்பாக்கம் போலீசார், இருவரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.விசாரணையில், பெங்களூரு, ஆர்.கே.புரத்தைச் சேர்ந்த அபினாஷ், 30, மற்றும் அவரது அத்தை மகள் பல்லவி, 21, என, தெரிந்தது. பட்டதாரியான இருவரும், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இவர்களின் திருமணத்திற்கு, பல்லவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில், வீட்டைவிட்டு வெளியேறிய இருவரும், 10 நாட்களாக, சித்தாலப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள, அபினாஷ் தங்கை வீட்டில் தங்கினர்.இதையறிந்த பெற்றோர், பல்லவியை தொடர்பு கொண்டு, 'நீ பெங்களூரு திரும்பி வராவிட்டால், நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்' என, மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், மனமுடைந்த காதல் ஜோடி, நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு செல்வதாக கூறி புறப்பட்டுள்ளனர்.பின், பூச்சி மருந்து குடித்து, தற்கொலை செய்தது தெரிந்தது. போலீசார், உறவினர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். காதல் ஜோடி தற்கொலை விவகாரம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
14-ஏப்-202109:14:13 IST Report Abuse
chennai sivakumar படித்த முட்டாள்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X