பிரான்மலையைச் சுற்றும் சமூக விரோதிகள் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
பிரான்மலையைச் சுற்றும் சமூக விரோதிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
23:48

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பிரான்மலை பகுதியில் சுற்றி வரும் சமூக விரோதிகளால் இயற்கை வளங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.



பாரி ஆண்ட பறம்புமலை என்று அழைக்கப்படுவதும், 2500 அடி உயர சுயம்புலிங்கமாய் காட்சி தருவதுமான பிரான்மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள குன்றுகளில் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன. கோடைகாலம் என்பதால் பல மரங்கள் இலைகளை உதிர்த்து காய்ந்துள்ளன. இந்நிலையில் இம்மலையை சுற்றிப் பார்க்க பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களோடு அவ்வப்போது சமூக விரோதிகளும் வந்து மலையில் அமர்ந்து மது அருந்தி, சீட்டு விளையாடி செல்கின்றனர்.



கடந்த ஆண்டு மர்ம நபர்கள் பற்ற வைத்த தீயால் பிரான்மலையில் காட்டுத்தீ பரவி, கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.எனவே இந்த ஆண்டு சமூக விரோதிகள் யாரும் அதுபோன்ற செயல்களில் இது படாதவாறு வனத்துறையும் போலீசாரும் கண்காணிக்க வேண்டும். மலைக்குச் செல்லும் முக்கிய வழிகளில் சிசிடிவி கேமராக்களை அமைத்து கண்காணிப்பதுடன், சந்தேகத்திற்கிடமான நபர்களை அடையாளம் கண்டு அவர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X