கொரோனா தடுப்பு பணி ஐ.ஏ.எஸ்.,கள் நியமனம்  
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
00:06

சிவகங்கை : பிளஸ் 2 தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு பணி முறையாக நடக்கிறதா என கண்காணிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.



சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணும் பணி மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள பிளஸ் 2 தேர்வினை அரசு மாற்றி அமைத்துள்ளது. மே 3 ம் தேதி துவங்கும் தமிழ் தேர்வு, மே 31 ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மே 5 முதல் பிளஸ் 2 தேர்வு துவங்கும் என தெரிவித்துள்ளது.



பள்ளி தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு பணிகள் முறையாக நடந்துள்ளதா என கண்காணிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது. சென்னை மண்டலத்திற்கு தமிழ்நாடு பாடநுால் கழக நிர்வாக இயக்குனர் ஜெயந்தி, சேலம் மண்டலத்திற்கு சமக்ர சிக்சா அபியான் திட்ட இயக்குனர் லதா, திருச்சி மண்டலத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ், மதுரை மண்டலத்திற்கு சமக்ர சிக்சா அபியான் உதவி திட்ட அலுவலர் அமிர்த ஜோதி நியமிக்கப்பட்டுள்ளனர்.



மதுரைக்கு வயதுவந்தோர் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், ராமநாதபுரம், சிவகங்கைக்கு மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கோபிதாஸ், திண்டுக்கல், தேனிக்கு சமக்ர சிக்சா அபியான் திட்ட இணை இயக்குனர் அருள்முருகன், துாத்துக்குடி, விருதுநகருக்கு இணை இயக்குனர் செல்வகுமார், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசிக்கு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X