தேர்தலில் ஓட்டுப்பதிவு சரிவை தடுக்க நடவடிக்கை... எப்போது?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
00:10

2021 சட்டசபை தேர்தலில் இம்மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் 1,679 ஓட்டுச்சாவடிகளில் ஏப்.,6 ல் ஓட்டுப்பதிவு நடந்தது.



நான்கு சட்டசபை தொகுதிகளில் 11 லட்சத்து 87 ஆயிரத்து 115 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், தேர்தலன்று 8 லட்சத்து 19 ஆயிரத்து 354 வாக்காளர்கள் மட்டுமே, வாக்களித்து 69 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வை வழங்கியுள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தினர்.



அப்படி இருந்தும் இத்தேர்தலில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 761 வாக்காளர்கள் ஓட்டுச்சாவடியை எட்டிக்கூட பார்க்கவில்லை. வீணான 31 சதவீத ஓட்டுக்கள்கோடை வெயிலில் வீடு, வீதிகளில் சென்று ஓட்டு சேகரித்த கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் 31 சதவீத ஓட்டுக்கள் பதிவாகாமல் வீணாகி விட்டதே என புலம்பி வருகின்றனர்.



வாக்காளர்கள் ஓட்டளிக்க வராததற்கான காரணத்தை அறிந்து, அக்குறைகளை நீக்கி அடுத்த தேர்தலில் 100 சதவீத ஓட்டுக்களை கைப்பற்ற தேர்தல் கமிஷன் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் வாக்காளர்கள்பல முறை எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்று சென்றவர்கள், இத்தொகுதியில் ஒரு தொழில் வளர்ச்சியை கூட ஏற்படுத்தவில்லை. இதனால், பிழைப்பு தேடி வெளிநாடு மற்றும் திருப்பூர், கோயம்புத்துார், ஈரோடு மாவட்டங்களுக்கு சென்று விட்டனர். அப்படி சென்றவர்கள் ஓட்டளிக்க முன்வராதது ஒரு காரணம்.



அரசு இயந்திரம் மீது அதிருப்தி



அரசு அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் பிறப்பு, இறப்பு சான்று பெறக்கூட அலைய வேண்டியுள்ளது. இது மட்டுமின்றி அடிப்படை பணிகள் மட்டுமின்றி எந்தவித அரசு சார்ந்த பணிகளை செய்து தர கவனிப்பு செய்ய வேண்டிய நிலைக்கு அரசு நிர்வாகம் சென்றுவிட்டது. இக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தான், ஓட்டளித்து என்ன பிரயோஜனம் என்ற அதிருப்தியில் ஓட்டளிக்க மக்கள் முன்வரவில்லை.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X