தந்தையை தவிக்க விட்ட மகன்; சர்வதேச விழாவில் தேர்வான குறும்படம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
00:14

திருவாடானை : திருவாடானை அருகே மருதாந்தையை சேர்ந்த சினிமா இணை இயக்குநர் தயாரித்த குறும்படம் சர்வதேச குறும்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டது.



ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மருதாந்தை கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் 41. சினிமா இணை இயக்குநர். ஆரம்பத்தில் சமூக பிரச்னையால் பாதிக்கப்பட்ட இவர் குறும்படங்கள் மூலம் அப் பிரச்னைகளை வெளிப்படுத்த முயன்றார்.சமீபத்தில் இவர் இயக்கிய பொற்காசு என்ற குறும்படம் சென்னை ஆறாம் சர்வதேச குறும்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டது.அப்படத்தில் மகனின் உயர்வுக்காக தந்தை கஷ்டப்படுவதையும், மகன் அமெரிக்காவில் உயர்ந்த நிலைக்கு சென்றவுடன் தந்தையை காப்பாற்றாமல் தவிக்க விடுவதையும் படமாக்கியிருந்தார்.



அருண்குமார் கூறியதாவது:ஒவ்வொரு அப்பாக்களும் தன் பிள்ளைகளை உயர்ந்த நிலையில் அமர்த்த வேண்டும் என்பதே அவர்களின் லட்சியம். மகன்களின் வாழ்க்கைக்காக தியாகம் செய்யும் சில அப்பாக்களை மகன்கள் தவிக்க விடுகின்றனர். அயல் நாட்டை கண்டுவிட்டால் அப்பாவை மறந்து விடும் பிள்ளைகளை பற்றி படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. வசதி வந்த பிறகு இடையூறாக இருக்கும் அப்பாக்களை வீதியில் தள்ளி, பசியில் தவிக்கவிடும் கொடுமைகள் என்னை பாதித்ததால் பொற்காசு என்ற படத்தை தயாரித்தேன். இப் படம் விபின் யுனிவர்சல் ஸ்டுடியோவில் தயாரிக்கபட்டது. பல்வேறு மொழிகளை கொண்ட சென்னை ஆறாம் சர்வதேச குறும்பட விழாவில் தேர்வு செய்யபட்டு படைப்புக்குரிய அங்கீகாரம் கிடைத்தது என்றார்.இவரை பாராட்ட அலைபேசி எண் 73056 94140.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X