மது விற்றவர்கள் கைது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மது விற்றவர்கள் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
00:27

மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் காமராஜர் ரோடு, இடையர்பாளையம் பிரிவு, டைடல் பார்க் ரோடு, விமானநிலையம் பகுதி உள்ளிட்ட இடங்களில் சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.பான்மசாலா விற்றவர் கைதுசரவணம்பட்டி போலீசார் நேற்று முன்தினம், கணபதி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்களை விற்பனை செய்த முருகேஷ், 67 என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து, ஹான்ஸ் உள்ளிட்ட பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X