கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்; 175 வழக்குகள்; 7.90 லட்சம் அபராதம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்; 175 வழக்குகள்; 7.90 லட்சம் அபராதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
03:12

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.7.90 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.



மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். கடந்த 10 ம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.அதன்படி சுகாதாரத்துறையினர், போலீசார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஏப். 7ம் தேதி முதல் இதுவரை 3950 பேரிடம் முகக்கவசம் அணியாததற்காக ரூ.200 வீதம் ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.



சமூக இடைவெளி கடைபிடிக்காத நிகழ்ச்சிகள், நபர்கள், வணிக வளாகம் என 175 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லையேல் இது போன்ற நடவடிக்கைள் தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X