மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகள் அதிகரிப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
03:15

மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற வழக்குகளின் அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலும் இளம் வயதினரே அதிகம் ஈடுபடுகின்றனர். குறிப்பாக 16 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கொரோனாவால் பொருளாதார இழப்பு, வேலையின்மை, விரக்தி போன்ற பல்வேறு காரணங்களால் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. பள்ளி, கல்லூரிகள் இல்லாததால் பணத்தாசையை காட்டி முக்கிய புள்ளிகள் இவர்களை இது போன்ற செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.



நீளும் பட்டியல்:



குறிப்பாக கொரோனாவிற்கு பின்னரே இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. கடந்தாண்டு பழநி இரட்டை கொலை முதல் இரு தினங்களுக்கு முன்பு நடந்த பால் வியாபாரி கொலை வரை அதிக தொடர்புள்ளவர்கள் இளம் குற்றவாளிகளே.திண்டுக்கல்லில் கூலித் தொழிலாளி, தி.மு.க., பிரமுகர் அருண்குமார் கொலை, ஒட்டன்சத்திரம், சாணார்பட்டி பாலியல் வழக்குகள், பைனான்ஸியர் கொலை, போதையில் ஒரு இளைஞர் பாட்டிலால் அடித்து கொலை, பள்ளி மேலாளர் கொலை, பாலியல் வழக்குகள் என அனைத்திலும் ஈடுபடுவது இளம் குற்றவாளிகளே.



இது மட்டுமல்லாமல் கஞ்சா வழக்கு, போக்சோ, மணல் கடத்தல், கொலை, செல்போன் திருட்டு, பைக் திருட்டு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் பெரும்பாலானோர் படித்த மற்றும் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல். கடந்த ஓராண்டில் 15 சிறார்களும் 50 க்கும் மேற்பட்ட இளம் வயதினருமே் குற்ற வழக்கில் அதிகம் கைதாகியுள்ளனர்.இளம் வயதினரை நல்வழிப்படுத்த அரசோ அல்லது போலீசாரோ ஏதேனும் நடவடிக்கை எடுத்தே வேண்டும். இல்லையெனில் திண்டுக்கல் கொலைநகராவதை தவிர்க்க இயலாது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X