பஸ்சில் 'மாஸ்க்' பிரச்னை: நடத்துனர்கள் புலம்பல் | மதுரை செய்திகள் | Dinamalar
பஸ்சில் 'மாஸ்க்' பிரச்னை: நடத்துனர்கள் புலம்பல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
03:47

மதுரை : மதுரை அரசு டவுன் பஸ் பயணிகளிடம் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தும்போது பிரச்னை ஏற்படுவதாக நடத்துனர்கள் புலம்புகின்றனர்.



தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதால் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே செல்லவும், முகக்கவசம் கட்டாயம் எனவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கிராமங்களில் முகக்கவசம் அணியாமல் பயணிகள் ஏறுகின்றனர். அவர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் முகக்கவசம் அணிய வலியுறுத்துவது சவாலாக உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.



நடத்துனர்கள் கூறுகையில் "50 சதவீதம் பயணிகள் தான் ஏற்ற வேண்டும் என்பதால் கலெக்சன் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களையும் இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. கொரோனா பரவலை தடுக்க பயணிகளை முககவசம் அணிய கட்டாயப்படுத்தினால் எங்களுடன் தகராறு செய்கின்றனர். முகக்கவசம் அணியாத பயணி இருந்தால் ஆய்வு அதிகாரிகள் எங்களை எச்சரித்து, நிர்வாகத்திலும் புகார் செய்கின்றனர். மனஉளைச்சலுடன் உள்ளோம்” என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X