ரூ.66.02 லட்சம்! மாஸ்க் அணியாதோருக்கு அபராதம் விதிப்பு; கொரோனா வேகமெடுப்பதால் நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
03:50

மதுரை : மதுரை நகரில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.66.02 லட்சம் வசூலாகி இருக்கிறது.



மாநகராட்சி எல்லை பகுதியில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. ஒரு தெருவில் 3 அல்லது அதற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டால், அத்தெருவிற்கு 'சீல்' வைக்கும் நடைமுறை அமலாகியுள்ளது. இங்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். தற்போது நகரில் மட்டும் 25 தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பாதிப்பு உயர்கிறது. ஆனாலும் மக்களிடம் பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை.



சமூக இடைவெளி, மாஸ்க் விஷயத்தில் அலட்சியம் தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது.குறிப்பாக மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஆங்காங்கே நின்று சோதனை மேற்கொள்கின்றனர்.



நேற்று மண்டலம் 1ல் ரூ.16,400, மண்டலம் 2ல் ரூ.13,000, மண்டலம் 3ல் ரூ.20,000, மண்டலம் 4ல் ரூ.36,400 என ஒரே நாளில் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ரூ.85,800 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதுவரை 26 ஆயிரம் பேர் அபராத நடவடிக்கையில் சிக்கியுள்ளனர். அந்த வகையில் மட்டும் ரூ.66,02,340 வசூலாகி இருக்கிறது

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
15-ஏப்-202117:24:46 IST Report Abuse
oce மாஸ்க் அணிந்தவர் எத்தனை பேர்கள் குரோனாவில் தப்பினர் என்பதற்கு கணக்குண்டா. தொண்டைக்கு எப்போதும் கூல்டிரிங்ஸில் குளிர்ச்சியை கொடுத்துக்கொண்டே இருப்பவர்களுக்கே அவர்கள் மாஸ்க் அணிந்தாலும் தொண்டை குளிர்ச்சியை நுகரும் குரோனா வைரஸ்கள் காதுகள் வழியாகவும் தொண்டைக்கு செல்கின்றன. அதனால் காதுக்கும் மாஸ்க் மாட்ட முடியுமா. தொண்டையை எப்போதும் வறட்சியின்றி ஈரமாக வைத்திருப்பவர்களுக்கே குரொனா தாக்கல் அதிகமிருக்கும்.
Rate this:
Cancel
ceebee - singapore,சிங்கப்பூர்
14-ஏப்-202121:33:35 IST Report Abuse
ceebee மாஸ்க் அணியாதவரிடம் அபராதம் வாங்கி கொண்டு பத்து மாஸ்க் இலவசமாய் கொடுக்கலாமே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X