அசத்தல்: 399 இடங்களில் ஊர்வலம், பிரசார கூட்டங்கள்: புதுச்சேரியில் களை கட்டிய தேர்தல் திருவிழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

14 ஏப்
2021
16:54
பதிவு செய்த நாள்
ஏப் 14,2021 05:11

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 159 கூட்டங்களையும், 115 தெருமுனை கூட்டங்களையும் அரசியல் கட்சியினர் நடத்தி முடித்துள்ளனர்.தேர்தல் நேரங்களில் பொதுக் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை நடத்தி பொதுமக்கள் மத்தியில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொள்வது வழக்கம்.



இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த, மற்ற நேரங்களில் போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளை தனித் தனியாக அணுகி அனுமதி பெற வேண்டும்.சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினருக்கு உடனடியாக அனுமதியளிக்க, ஒற்றை சாளர அனுமதி பிரிவை தேர்தல் துறை ஏற்படுத்தியது. இந்த பிரிவின் நோடல் அதிகாரியாக சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் நியமனம் செய்யப்பட்டு, போக்குவரத்து, போலீஸ், பொதுப்பணி, தீயணைப்பு, வருவாய், உள்ளாட்சி ஆகிய துறைகளை சேர்ந்த 24 அதிகாரிகள் பணியாற்றினர். சாரத்தில் உள்ள திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை வளாகத்தின் தரை தளத்தில் ஒற்றை சாளர அனுமதி பிரிவு செயல்பட்டது. ஓட்டு சேகரிப்பது, பிரசாரம் செய்வது, கூட்டம், ஊர்வலம் நடத்துவது, தேர்தல் அலுவலகம் திறப்பது போன்றவற்றுக்காக மாநிலம் முழுவதும் 1,413 விண்ணப்பங்களை அரசியல் கட்சியினர் அளித்திருந்தனர்.



இதில், 1,343 விண்ணப் பங்களுக்கு, தேர்தல் விதிமுறைகள் பின்பற்றி நடத்த வேண்டும், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச் சரிக்கை வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் உட்பட பல நிபந்தனைகளுடன், ஒற்றை சாளர அனுமதி பிரிவு அனுமதி வழங்கியது. 65 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. விதிமீறல் உள்ளிட்ட சில காரணங்களால் 5 விண்ணப்பங்கள் ரத்தாகின.புதுச்சேரி பகுதியில் மட்டும் 898 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 871 விண்ணப்பங்களுக்கு அனுமதி தரப்பட்டது; 27 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.ஒற்றை சாளர அனுமதி பிரிவில் முறையாக அனுமதி பெற்று 59 இடங்களில் தற்காலிக கட்சி அலுவலகங்களை வேட்பாளர்கள் திறந்திருந்தனர்.



மேலும், 159 இடங்களில் கூட்டங்களை நடத்தி அரசியல் கட்சியினர் அசத்தி உள்ளனர். 115 இடங்களில் தெருமுனை கூட்டங்களையும், 125 இடங்களில் ஊர்வலங்களையும் நடத்தி உள் ளனர். 521 பிரசார வாகனங்களுக்கு முறைப்படி அனுமதி பெற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X