கி.பி.,10ம் நுாற்றாண்டு கல்செக்கு விழுப்புரம் அருகே கண்டுபிடிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
05:15

விழுப்புரம் : விழுப்புரம் அருகே எழுத்து பொறிப்புடன் கூடிய கி.பி., 10ம் நுாற்றாண்டு கல் செக்கு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



விழுப்புரம் அடுத்த கெடார் அருகே செல்லங்குப்பம் கிராமத்தில் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர்கள் ரமேஷ், ரங்கநாதன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள உரல்கொல்லை என்னுமிடத்தில் எழுத்து பொறிப்புடன் கூடிய கல் செக்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து உதவி பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது;இந்த கிராமத்தில் உள்ள உமாமகேஸ்வரர் சிவன் கோவிலுக்கு அருகில் உரல் கொல்லை என்று அழைக்கப்படும் நிலத்தில் 122 செ.மீ., நீளம், 117 செ.மீ., அகலம், உட்புற குழி 30 செ.மீ., ஆழம் கொண்ட கல் செக்கு உள்ளது. இதன் ஓரத்தில் மூன்று வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.



இதில், ஸ்வஸ்தஸ்ரீ இச்செக்கு வைத்தேன். விளக்கெறிக்க ஆவடுகன் கவரனேன். இதில், ஆட்டினார் ஒரு உழக்கு எண்ணெய் அட்டுக என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, இச்செக்கினை விளக்கெறிக்க எண்ணெய் ஆட்டுவதற்கு ஆவடுகன் கவரனேன் என்பவன் செய்து கொடுத்ததையும், இதில், எண்ணெய் ஆட்டுபவர் ஒரு உழக்கு எண்ணெய் வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.அதாவது, இதன் அருகே சிவன் கோவில் உள்ளது. அதற்கு விளக்கு எறிக்கவே இந்த செக்கு செய்து கொடுக்கப்பட்டது என்பது தெரிகிறது. இதன் எழுத்தமைப்பை கொண்டு இச்செக்கு கி.பி., 10ம் நுாற்றாண்டை சேர்ந்தது எனலாம். முதலாம் ராஜேந்திர சோழனின் மலேசிய (கிடாரம்) வெற்றிக்கு பிறகு கிடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டான்.திருவாரூருக்கு அருகில் கிடாரம்கொண்டான் என்ற ஊர் உள்ளது. இதுபோல் கிடாரம்கொண்டான் என்று இருந்து அதுவே சுருங்கி கிடார் என்றாகி பின், கெடார் என்று மறுவி வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற கல்வெட்டு கேட்பாரின்றி கிடக்கிறது. இதன் பழமையையும், வரலாற்று சிறப்பையும் கருதி இவற்றை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X