இறந்தவர்கள் உடல் மாற்றி ஒப்படைப்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
இறந்தவர்கள் உடல் மாற்றி ஒப்படைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
23:46

புவனகிரி:கடலுார் அரசு மருத்துவமனையில், கொரோனா நோயால் இறந்தவரின் உடல்களை மாற்றி கொடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த பெருமாத்துாரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன், 53; கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு இறந்தார்.பண்ருட்டி அடுத்த தொரப்பாடியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 51; பத்திர எழுத்தர். இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இறந்தார்.பரிசோதனை முடிவில், ஆறுமுகத்துக்கு தொற்று இல்லை என உறுதியானது. ஆறுமுகம் உடலை முழுதும் மூடிய மருத்துவமனை ஊழியர்கள், தவறுதலாக ஜாகிர் உசேன் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஜாகிர் உசேன் உடலை, ஆறுமுகம் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.ஆறுமுகம் உடலை பெற்றுச் சென்ற ஜாகிர் உசேன் உறவினர்கள், முஸ்லிம் முறைப்படி தொரப்பாடி பள்ளிவாசல் இடத்தில், நேற்று அடக்கம் செய்தனர்.



ஜாகிர் உசேன் உடலை பெற்றுச் சென்ற ஆறுமுகம் உறவினர்கள், நேற்று மாலை அடக்கம் செய்வதற்கு முன், மூடப்பட்ட முகத்தை திறந்து பார்த்தபோது, அது ஆறுமுகம் அல்ல என தெரிந்து, அதிர்ச்சியடைந்தனர்.தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், தொரப்பாடியில் இருந்து ஜாகிர் உசேன் உடலை பெற்று, பெருமாத்துாரில், ஜாகிர் உசேன் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.



மேலும், அடக்கம் செய்யப்பட்ட ஆறுமுகம் உடலை தோண்டி எடுத்து, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்பகுதி மக்கள் திரண்டு, கொரோனா தொற்று பரவுவதால் புதைக்கப்பட்ட ஆறுமுகம் உடலை தோண்டி எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தாசில்தார் அன்பழகன், இன்ஸ்பெக்டர் ராபின்சன் பேச்சுக்கு பின், ஆறுமுகத்தின் உடலை தோண்டி எடுத்து, அவரது குடும்பத்தினரிடம் இரவு, 7:10 மணிக்கு ஒப்படைத்தனர்.



'மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால், உடலை மாற்றிக் கொடுத்தது கண்டிக்கத் தக்கது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இருவரது உறவினர்களும் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X