தடுப்பூசி மையங்களை அதிகரிக்க முடிவு! மருத்து பற்றாக்குறை தீர்க்க அரசுக்கு அறிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
23:48

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியில் தற்போது, 6 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மையங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தீவிரம் காட்டப்படுகிறது.



பொள்ளாச்சி நகரில் அரசு மருத்துவமனை, காமாட்சி நகர், வடுகபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஊராட்சி பகுதிகளில், கஞ்சம்பட்டி, நெகமம், நல்லட்டிபாளையத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.இதில், கஞ்சம்பட்டியில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு, 250 - 280 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.



பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், தினமும், 100 பேருக்கு ஊசி போடப்படுகிறது.ஒரு 'வயால்' தடுப்பூசி மருந்து, 10 பேருக்கு போடப்படுகிறது. துவக்கத்தில் மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டியதால், சுகாதார துறை குறைந்த அளவே தடுப்பூசி மருந்து இருப்பு வைத்துள்ளது.கடந்த ஒரு வாரமாக, தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பூசி மருந்து பற்றாக்குறை நிலவுகிறது. மருந்து இருப்பு நிலவரத்துக்கு ஏற்ப, தடுப்பூசி செலுத்தப்படுகிறது.



சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'மருந்துக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது குறித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு தரப்பில் இருந்து தடுப்பூசி மருந்தும் அனுப்ப துவங்கியுள்ளனர்.



தடுப்பூசி மருந்து இருப்பு அதிகரிக்கும் போது, சமத்துார், ஜமீன் ஊத்துக்குளி, புரவிபாளையம், ராமபட்டணம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி மையங்கள் துவங்கப்படும். குறைந்தது, 70 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி மையம் துவங்க திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.



பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, நேற்று இரண்டாவது நாளாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கிளை - 1ல் இரண்டாவது நாளாக நடந்த முகாமில், 100 ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. நாளை, கிளை - 2ல் முகாம் நடக்கிறது.அச்சம் வேண்டாம்!வால்பாறை அரசு மருத்துவமனைகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. 45 வயதுக்கு மேற்பட்டோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.



வால்பாறை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சமணன் கூறியதாவது:வால்பாறை, சோலையாறு, முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், வால்பாறை அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி போடப்படுகிறது. இன்று (15ம் தேதி) அய்யர்பாடி எஸ்டேட் மருத்துவமனையில், 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.



வால்பாறையில் இது வரை, இரண்டாயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தேவையான அளவு தடுப்பூசி இருப்பில் உள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். தடுப்பூசி குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.



ஆனைமலைக்கு 60 சதவீதம் சப்ளை!



ஆனைமலை ஒன்றியத்தில், ஆனைமலை, வளந்தாயமரம், ஆழியாறு, பெத்தநாயக்கனுார், சேத்துமடை, காளியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில், இதுவரை, 2,550 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோட்டூர் அரசு மருத்துவமனை வாயிலாக, 860 பேருக்கும்; வேட்டைக்காரன்புதுார் மருத்துவமனையில், 750 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.



சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'மக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேடி வருகின்றனர். ஆனால், கேட்பதில், 60 சதவீதம் அளவுக்கு மட்டுமே தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது. இதனால், மக்களுக்கு போதிய அளவு தடுப்பூசி போட முடிவதில்லை. இரண்டாம் தவணை போடுபவர்களுக்கும், உரிய நேரத்தில் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டு, மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X