காட்டுத்தீ இல்லை; வனவிலங்குகள் 'ஜாலி'; வனத்தை காக்கும் வான் மழை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
23:55

ஆனைமலை : ஆனைமலை புலிகள் காப்பகம் முழுவதிலும், கோடை மழை பெய்து வருவதால், இந்தாண்டு காட்டுத்தீ அபாயம் நீங்கி, வனவிலங்குகளுக்கு குடிநீர் கிடைத்துள்ளது.



மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான, ஆனைமலை புலிகள் காப்பகம் முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலமாக திகழ்கிறது. இங்கு அதிக அளவில் யானைகள், சிறுத்தை, கடமான், வரையாடுகள் என, பலவகை வனவிலங்குகள், பறவை இனங்கள் உள்ளன. இவற்றுக்கு மரங்களும், தாவரங்களும் வாழ்வாதாரமாக உள்ளன.



இந்நிலையில், ஆண்டுதோறும் மார்ச் இறுதி முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில், ஆழியாறு, நவமலை, டாப்சிலிப், வால்பாறை பகுதிகளில், காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். அப்போது, தாவரங்கள், மரங்கள் அழிந்து பல வனவிலங்குகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது.



இந்தாண்டு, அவ்வப்போது மழை பெய்வதாலும், மற்றும் வனத்துறையின் கண்காணிப்பாலும் சுற்றுலா பயணிகளின் அத்துமீறல் குறைந்து, காட்டுத்தீ ஏற்படுவது குறைந்துள்ளது. சாதாரணமாக ஆண்டுதோறும், ஏப்., இறுதிக்குள் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கும். இந்தாண்டு, இதுவரை ஒரு இடத்தில் கூட காட்டுத்தீ ஏற்படவில்லை.



ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் செல்வம் கூறியதாவது: நடப்பாண்டு வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், அடுத்த சில வாரங்களுக்கு காட்டுத்தீ ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு.அதேசமயம், அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வரும், ஆழியாறு, நவமலை, டாப்சிலிப் பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாமல் உள்ளது.



செயற்கை காரணங்களால் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க, சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பல பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் சிற்றோடை, ஓடை, வனத்துறை சார்பில் கட்டப்பட்ட தடுப்பணை, கசிவுநீர் குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து, வனவிலங்குகளுக்கு போதிய அளவு குடிநீர் கிடைத்துள்ளது.



இதனால், வனவிலங்குகள் வனத்தைவிட்டு வெளியேறுவது பெரும் அளவு குறைந்துள்ளது. மழை குறைவாக உள்ள பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பியும், வனவிலங்குகள் தாகம் தீர்த்து வருகிறோம். இவ்வாறு, தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X