ராஜபாளையம் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் கொலை 3 பட்டதாரிகள் கைது | விருதுநகர் செய்திகள் | Dinamalar
ராஜபாளையம் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் கொலை 3 பட்டதாரிகள் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
02:02

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முன்விரோதத்தால் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன் 47, வெட்டி கொலை செய்யப்பட்டார்.



பழிக்கு பழியாக நடந்த சம்பவத்தில் பட்டதாரிகள் மூவர் கைது செய்யப்பட்டனர். தளவாய்புரம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தாமரைக்கனி 22. கபடி வீரரான இவர் நாகர்கோவில் தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்தார். கொரோனா விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தபோது 2020 ஏப்.7ல் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.



விசாரணையில் திருமணத்தின்போது ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை நடந்தது தெரிய வந்தது. இவ்வழக்கில் ராஜபாளையம் 13-வது வார்டு தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன், சகோதரர் சக்தி கணேசன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2020 நவம்பரில் ஜாமினில் வந்தனர்.உயிருக்கு பயந்து அண்ணாமலை ஈஸ்வரன் குடும்பத்துடன் நாகர்கோவிலில் வசித்து வந்தார்.



தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் விநாயகர் கோயிலில் வழிபட காரில் வந்தார். இதையறிந்தவர்கள் நேற்று மதியம் 1:15 மணிக்கு காரை வழிமறித்து அண்ணாமலை ஈஸ்வரனை வெட்டி படுகொலை செய்தனர். இதுதொடர்பாக அதே பகுதி பட்டதாரி இளைஞர்களான குழந்தை வேல் குமார் 22, ஜெகதீஸ்வரன் 22, மதியழகன் 27, ஆகியோரை சேத்துார் தாலுகா போலீசார் கைது செய்தனர். தாமரைக்கனி கொலைக்கு பழி தீர்த்ததாக போலீசாரிடம் கூறினர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X