பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க தாமதம் ஏன்? | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க தாமதம் ஏன்?
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
02:12

கோவை:'ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது' என, கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம், தேசிய துாய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.



கோவை மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர் பிரகாஷ், சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், முதல்கட்டமாக, இழப்பீடு தொகை ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும், தேசிய துாய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் கோவை வந்திருந்தார்.அவரிடம், துாய்மை பணியாளர்களுக்கு சட்ட ரீதியான சலுகைகள் வழங்கப்படுவதில்லை. 27வது வார்டில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், 40 பேருக்கு கடந்த மார்ச் மாத சம்பளம் இன்னும் வழங்காதது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.



இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், நிர்வாக பொறியாளர் சரவணக் குமார், உதவி கமிஷனர் (நிர்வாகம்) செந்தில்குமார் ரத்தினம் ஆகியோரிடம், கேள்வி எழுப்பினார்.'ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இ.எஸ்.ஐ.,- பி.எப்., போன்ற சட்ட சலுகைகள் கிடைக்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என, அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.



'பிரதமர் காப்பீடு திட்டத்தில், முற்றிலும் இலவசமாக, 5 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்யலாமே. அத்திட்டத்தை தொழிலாளர்களுக்கு அமல்படுத்த ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள். உயிரிழப்பு சமயங்களில் குடும்பத்தினருக்கு இழப்பீடாக, இன்சூரன்ஸ் தொகை கிடைக்குமே' என, ஆணைய தலைவர் கேட் டார்.'தேர்தல் நடத்தை விதிமுறையை தளர்வு செய்ததும், சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து, துாய்மை தொழிலாளர்கள் அனைவரையும் காப்பீடு திட்டத்தில் இணைத்து, அட்டை வழங்க ஏற்பாடு செய்கிறோம்' என, அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பின், நகர் நல அலுவலர் ராஜா மற்றும் மண்டல சுகாதார அலுவலர்களை சந்தித்தார். சுகாதாரப்பிரிவில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X