280 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கிய இருவர் கைது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
280 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கிய இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
02:22

அன்னுார்:கோவை அருகே, 14 டன் எடையுள்ள, 280 மூட்டை ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது; இருவர் கைது செய்யப்பட்டனர்.



கோவை மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், அன்னுார் போலீசாரும், நேற்று முன்தினம் இரவு, கோவை மாவட்டம், அன்னுார் அடுத்த சொக்கம் பாளையத்தில், ஒரு தோட்டத்து குடோனில், அதிரடி சோதனை நடத்தினர்.தவிடு விற்பனை செய்து வரும் அந்த குடோனில், ரேஷன் அரிசி, தலா, 50 கிலோ எடையுடன், 280 மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.



14 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த ராமகிருஷ்ணன், 40; லாரி டிரைவர் சரவணகுமார், 33 ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர்.ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப் பட்டது. பல மாதங்களாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து அவற்றை கேரளாவுக்கு கடத்தியது, விசாரணையில் தெரியவந்தது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X