இளம் வாக்காளர்களின் ஓட்டு யாருக்கு?புதிய சக்தியாக உருவெடுத்ததால் கலக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
04:25

புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப் பணிகள், கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.



வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 72 ஆயிரத்து 650 பேரும், பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 31 ஆயிரத்து 431 பேரும் இடம் பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 116 பேர் உள்ளனர்.இறுதி வாக்காளர் பட்டியலில் 31 ஆயிரத்து 864 புதிய வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 18 - 19 வயது நிரம்பிய இந்த இளம் வாக்காளர்கள், கடந்த 6ம் தேதி நடந்த தேர்தலில் முதல் முறையாக தங்களது ஓட்டை பதிவு செய்து ஜனநாயக கடமையை வெற்றிக்கரமாக நிறைவேற்றி உள்ளனர்.ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 1000 இளம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். சட்டசபை தேர்தலை பொருத்தவரை 1000 ஓட்டுகள் என்பது வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இளம் வாக்காளர்கள் பெரும்பாலும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளாக உள்ளனர். இவர்களை பொருத்தவரை இலவசங்கள் எதையும் விரும்பவில்லை. தங்களது எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகளையே பெரிதும் எதிர்பார்த்தனர். இதை அரசியல் கட்சியினரும் நன்றாக புரிந்து கொண்டனர்.இதன் எதிரொலியாக, பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இளம் வாக்காளர்களை கவரும் வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்; புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; அரசு துறைகளில் காலியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான ஏராளமான அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தன.



அடுத்ததாக, கல்வி தொடர்பான திட்டங்களும் போட்டி போட்டுக் கொண்டு அதிகளவில் அறிவிக்கப்பட்டு இருந்தன. மகளிர், இளைஞர்கள் தொடர்பான திட்டங்களும் கூடுதலாக இடம் பெற்றிருந்தன. எந்த கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் புதிய வாக்காளர்களையும், இளம் வாக்காளர்களையும் கவர்ந்தன என்பது குறித்த 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.இவர்களது ஓட்டு தங்களுக்கு கிடைத்திருக்குமா என்பது குறித்து அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும பல்வேறு கணக்குகளை போட்டு விவாதம் நடத்தி வருகின்றனர்.



இளம் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக முடிவு எடுத்திருந்தால், தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறிவிடும் என்பதால் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.எந்த கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் புதிய வாக்காளர்களையும், இளம் வாக்காளர்களையும் கவர்ந்தன என்பது குறித்த 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது. இளம் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக முடிவு எடுத்திருந்தால், தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறிவிடும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X