கொரோனா 2வது அலை பரவலை தடுக்க பிரதமர் மோடி கவர்னர்களுக்கு யோசனை | செய்திகள் | Dinamalar
கொரோனா 2வது அலை பரவலை தடுக்க பிரதமர் மோடி கவர்னர்களுக்கு யோசனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
04:25

புதுச்சேரி; 'கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்கலைக்கழகங்கள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் முன்னாள் படை வீரர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என' கவர்னர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்துள்ளதால், பிரதமர் மோடி மாநில கவர்னர்களுடன் நேற்று காணொளி மூலமாக கலந்துரையாடல் நிகழ்த்தினார். இதில், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலம் சார்பில் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், கவர்னரின் ஆலோசகர் சந்திரமவுலி, சுகாதாரத்துறை செயலர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி பேசியதாவதுஷஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளை 60 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்த வேண்டும். கொரோனா பாதிப்பு விகிதத்தை 5 க்கும் கீழ் குறைக்க வேண்டும். தடுப்பூசி திருவிழா நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 11.11 கோடி மக்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டிருகிறது. கொரோனா நடைமுறைகளை மக்களிடம் ஊக்குவிப்பதில் கவர்னர்களின் பங்கு முக்கியம். பல்கலைக்கழகங்கள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் முன்னாள் படை வீரர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா பாதிப்புகளை குறைக்க அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும். கவர்னர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் முக்கிய இணைப்பாக செயல்படுவர்கள். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட ஊக்கப்படுத்துவதற்கு மாநிலத்தில் உள்ள அனைத்து அமைப்புகளையும் திறம்பட பயன்படுத்த வேண்டும்.கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்களை தீவிரமாக ஈடுபடுத்தலாம். கூடுதலாக ஆம்புலன்ஸ், வென்டிலேடர்களை மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். கொரோனாவை ஒழிக்க ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவமுறைகளை பயன்படுத்த மக்களை ஊக்கப்படுத்தலாம். கொரோனா பரவலின் இரண்டாவது அலையை தடுக்கும் பணியில் இளைஞர்களை ஈடுபடுத்தலாம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X