பிரசவத்தில் குழந்தை இறந்ததை கண்டித்து அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
04:26

புதுச்சேரி: பிரசவத்தில் குழந்தை இறந்ததை கண்டித்து உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான அனுமந்தை கிராமத்தை சேர்ந்தவர் ராமு,28; இவரது மனைவி வனிதா,24; நிறைமாத கர்பிணியான இவர், புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, வனிதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடன் அவரை, ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் நேற்று காலை 9:45 மணிக்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.அப்போது, வனிதாவை பரிசோதித்தபோது அவரது வயிற்றிலேயே குழந்தை இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த பிரசவத்தில் இறந்த நிலையில் பெண் குழந்தை வௌியே எடுத்தனர்.அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பணியில் அலட்சியமாக இருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.அவர்களிடம் ரெட்டியார்பாளையம் போலீசார், புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், குழந்தை இறப்பு சம்பவம் தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X