வாட்ச்மேன் மயங்கி விழுந்து பலி | செய்திகள் | Dinamalar
வாட்ச்மேன் மயங்கி விழுந்து பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
04:26

புதுச்சேரி; நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த மதுபான கடை வாட்ச்மேன் மயங்கி விழுந்து இறந்தார்.புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம், பிரிதர்ஷிணி நகரை சேர்ந்தவர் பாஸ்கர்,46; அண்ணா சாலையில் உள்ள மதுபான கடையில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார்.குடிப்பழக்கம் உடைய இவர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் பாஸ்கர் வீட்டில் இருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.இதுகுறித்து அவரது மனைவி வெண்ணிலா அளித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X